றமழான் : அல்குர்ஆனின் மாதம்.
றமழான் : அல்குர்ஆனின் மாதம்.
றமழானிலேயே அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. அல்குர்ஆன் முழு மனித சமூகத்துக்குமான வழிகாட்டி. அல்குர்ஆனை நபி(ஸல்) அவர்கள் றமழானில் ஜிப்ரீல்(அலை) அவர்களுக்கு ஓதிக்காட்ட அவர்கள் சரிபார்ப்பார்கள். நபியவர்களின் இறுதி நோன்பில் இரண்டு முறை ஓதிக்காட்டியுள்ளார்கள்.
அல்குர்ஆனுடனான உறவை வளரத்துக்கொள்ள றமழான் மிகச் சிறந்த சந்தர்ப்பமாகும். ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபு தாபிஈன்கள், இமாம்கள் இம்மாதம் வந்துவிட்டால் அல்குர்ஆனுடனான உறவை அதிகரித்திருக்கிறார்கள்.
நாமும் அல்குர்ஆனுடனான உறவைப் பலப்படுத்த அதிகமதிகம் சிந்திக்க வேண்டும். அதற்கான பல வழி முறைகள் காணப்படுகின்றன.
1.ஓதல்
2.ஓதக் கற்றல்
3.தர்தீலாக ஓதல்
4.தஜ்வீத் முறைப்படி ஓதல்
5.குர்ஆனைக் கற்றல்
6.குர்ஆனைக் கற்பித்தல்
7.அதன்படி வாழல்
8.அதன்பால் அழைத்தல்
9.மன்னம் செய்தல்
10.ஓதுவதைக் கேட்டல்
போன்ற 10 வழிமுறைகளில் அல்குர்ஆனுடன் நெருங்க முடியும். எமக்காக பரிந்துரை செய்யும் இக்குர்ஆனுடனான நெருக்கத்தை உருவாக்க இவை சிறந்த வழிகளாகும்.