றமழான் : சமூக மாற்றத்திற்கான மாதம்.
றமழான் : சமூக மாற்றத்திற்கான மாதம்.
சமூக மாற்றம் என்பது இன்று பலராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாக உள்ளது. காரணம், சமூகம் பல்வேறு விடயங்களில் பின்னடைந்தும் திசைவிலகியும் காணப்படுவதாகும். இதன் விளைவால் இதற்காக வேண்டி உழைக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தனிமனிதன் மீதும் உள்ளது.
தனிமனிதர்கள் தம்மை எவ்வளவு தூரம் மாற்றிக்கொள்ள முனைகிறார்களோ அந்தளவுக்கு சமூகத்திலும் மாற்றம் ஏற்படுகிறது.
இந்த மாதம் வந்துவிட்டால் நாம் சமூகமாக ஒன்றினைந்து பல செயற்பாடுகளைச் செய்கிறோம். கிராமங்களை அலங்கரிக்கிறோம். பள்ளிவாயல்களை ஒழுங்குபடுத்துகிறோம். கூட்டாக இரவு வணக்கங்களில் ஈடுபடுகிறோம், ஐவேளை தொழுகைக்காகவும் பள்ளி நிரம்புமளவு ஒன்றுகூடுகிறோம், கூட்டாக இப்தார் செய்கிறோம், கூட்டாக கஞ்சி வழங்குகிறோம், கூட்டு ஸகாத்தை வழியுறுத்துகிறோம். இப்படிப் பல செயற்பாடுகளை நாம் சமூக மட்டத்தில் செயற்படுத்துகிறோம். இவை இம்மாதம் வந்துவிட்டால் சமூக அளவில் ஏற்படும் மாற்றங்களாகக் காணப்படுகின்றன. இவை பௌதீக ரீதியாக இம் மாத்த்திற்குள் மாத்திரம் சமூகத்துள் ஏற்படும் மாற்றங்களே. நிரந்தரமானவை அல்ல. சமூகத்தின் ஒழுங்கில், சமூக சீரமைப்பில் சமூக ஆன்மாவில் ஏற்படும் மாற்றங்களே அவசியமாகிறது. அவையே எதிர்பார்க்கப்படும் சமூக மாற்றம். அவையே ஏனைய மாதங்களுக்கும் நிரந்தரமான மாற்றம்.
இம்மாற்றம் இந்த றமழானில் நிகழ்வதற்கான சகல வழிகளும் உள்ளன. இம்மாத்தில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த உழைக்க முற்படுகின்றபோது நிச்சயம் சாத்தியமாகும்.
ஸல்(அலை) அவர்களது ஹிராவை நோக்கிய சமூக ஒதுக்கம் இந்த சமூக மாற்றத்தை எதிர்பார்த்ததாகவே அமைந்திருந்திருந்த்தது. அதற்காகவேண்டி றமழானில் அதிகம் ஹிராக்குகைக்குச் சென்று அல்லாஹ்விடம் சமூகத்தின் மீதான கவலையை வெளிப்படுத்தி எதிரபார்க்கப்படும் சமூக மாற்றத்துக்காக இறைஞ்சினார்கள்.
இதன் விளைவால் சமூகத்துக்கான வழிகாட்டியாக அவர்கள் தெரிவு செய்யப்பட்டு வழிகாட்டி நூல் அல்குர்ஆன் இறக்கியருளும் படலம் ஆரம்பமானது. எனவே, அன்புக்குரிய சகோதர்ர்களே, சகோதரிகளே இந்த மாதம் சமூக மாற்றத்திற்கான மாதம் என்பது இதன் மூலம் புலனாகிறது.
இம்மாத்த்தில் யுத்தம் ஹராமாக்கப்பட்டிருந்த போதிலும் கூட பல யுத்தங்கள் இடம்பெற்று பாரிய சமூக மாற்றங்களும் தூதர் காலம் தொட்டு நிகழ்ந்திருக்கின்றன.