மாற கதயொன்டு.
1 min readமாற கதயொன்டு.
******
சிங்களத்தில்,
#பியஸிரி அஜித் லியனகே, வத்தேகம, திக்வல்லை.
காலிப் பிரதேச சோனக மொழியில்,
Isbahan Sharfdeen
“என்னடா இது இபுடி ஒரு ட்ரபிக்”
“எக்சிடன்ட் எனா சரியோ?”
“ஐயோ எனக்குத் தெரியா.”
“இன்டக்கி 12 மணிக்கு நசக்காரன பாக்கேலா போவும்.”
“அப்ப?”
“அந்தி அஞ்ஜி மணிக்கு”
“வா போம். பஸ்லிருந்து எறங்கி முன்னுக்கு பெய்த்து பாபொம்.”
“எனக்கேலா நீ பெய்ட்டு வா.”
“ஏய் சல்மான் அடேய்…”
“பெfஸ்ட்டுக்கு செல்லே, இவளோ நேரம் எங்க பெய்த்தீந்தென்டு.”
“இங்கித கேளே மாற வேலயொன்டு நடக்குறு முன்னுக்கு.”
“எனாது?”
“மச்சான் பாத்துட்டீக்க பொருமதியான, க்ரேட் வேலயொன்டு.”
“எனாத ஆரப்பாட்டமா?”
“ஆர்ப்பாட்டம் ஒன்டுதான்.”
“இனி அதுலென்னடா ஈக்குரு க்ரேட்.”
“ஆர்ப்பாட்டம் ஒன்டும் நாட்டுக்கு புதிசில்லதான் அதுண்ம.”
“அப்ப.”
“இத நடத்துரது புதியாக்கள்.”
“புதியாக்கள்?”
“ஓ ஓ”
“என்ன புதுசுடா கெம்பஸ் பொடியன் குட்டியலாய்க்கும்.”
“இல்ல”
“அப்ப வேலயில்லாத பட்டதாரியள்”
“இல்ல”
“அப்ப பென்சன் போன கெழடு கட்டயளாய்க்கும்”
“இல்ல… இல்ல… டா”
“ஆ… தண்ணி கேக்குற ஆக்களா? இல்லாட்டி ரோட் போட்டு கேக்குறாக்களா?”
“இல்ல.. இல்ல.. இல்ல..”
“ஆ… சுவரா கந்தர இஸ்கூல் பின்ஸிபல மாத்தினத்துக்காய்க்கும்.”
“இல்ல டா, இந்த பழைய தொழிலொன்ட செய்ற ஆக்கள்.”
“பழய தொழிலா?”
“ஓ ஓ”
“எனாது.. அந்த நசல் இங்கக்கிம் பரவிட்டுதா?”
“எந்த நசல்?”
“காத கிட்ட கொணவா செல்ல. வேசத் தொழில சட்ட அனுமதி தரச் செல்லியா ஈக்கும் சுவரா?”
“இல்ல. அதென்ன ஜரா வேலயொன்டு. இதொரு பௌத்த நாடே.”
“ஒனக்கு நாள விடியவர சென்னாலும் பதில் தரேலா.”
“ஹா… எனக்கேலா… நான் தோத்துட்டேன்…. நீயே செல்லே”
“அடேய்… கள்ளனுவள்.”
“கள்ளனுவளா?”
“ஓ டா கள்ளனுவள்.”
“எந்த கள்ளனுவள்?”
“இந்த சாதாரண கள்ளனுவள்.”
“அவனுவள் எனா செல்ர?”
“பைத்தியம் புடிக்குமென்டாம் அவனுவள் செல்ரத கேட்டா.”
“எனாத்த செல்ர?”
“அவனுவள் செல்ற, பெரிய பெரிய ஆக்கள் தொழில் செய்ரென்டு செல்லிச் செல்லி செய்ரது களவான்டுரது தானாம். அந்தாக்களுக்கு களவான்டுரதுக்கு சம்பளமும் குடுக்குறாம். அதுக்குப்பொறவு பென்சன் போனா பென்சன் சல்லீம் குடுக்குறாம்.”
“இனி இனி”
“அந்த சேவ செய்ர கள்ளனுவள் டய் கோட்டெல்லம் போட்டு நல்ல மனிசரு மாதிரி வாஹனத்துல வந்து நல்ல AC காமரயல்ல ஈந்துகொண்டு களவான்டுறாம்.”
“ஓ..”
“அந்த கள்ள ஒபீசரெல்லாம் பரம்பரக் கணக்குக்கு களவன்டின பொறவு பொய்க்கி பொலிசால புடிச்சிட்டு எபேல வெளிய அனுப்புறாம். அப்பிடி வெளீல வார எல்லா கள்ளனுவளும் சிரிச்சிகொன்டாம் வெளீல வார. அவளோதானாம். வேற குடுக்க தண்டன இல்லயாம்.”
“மாற கதயொன்டே… இனி இனி.”
“அபிடீந்தத்துக்கு சாதாரண கள்ளனுவள் களவான்டுறது எந்த வசதியும் இல்லாமலாம். அவனுவளுக்கு ராவேல கூட தூக்கமில்லயாம். அவனுவளுக்கு டை கோட்டுமில்லயாம். கார் பாரும் இல்லயாம். மாட்டினா மனிசரு சேந்து கால் கைய ஒடக்கிறாம்.”
“அடே மாற கதயொன்டே.”
“அதுக்கு பொறவு பொலிஸுக்கு கொண்டு பெய்த்து பொலிஸாலேம் அம்பானெக்கி தகத்து கோட்டுக்கு போடுறாம். அதுக்கு பொறவு மாஸக்கணக்குக்கு வருச கணக்குக்கு மாமியூட்டுல கம்பி எண்ணவேண்டியதுதான். அப்பிடீந்துட்டு வரகொல பொண்டாட்டி வேற ஒத்தனோட பெயத்தாம். அதுக்கு பொறவு குடும்ப வாழ்கேம் முடிஞ்சுதாம்.”
“இனி இனி அடே மாற கேஸே டா.”
“அய் சுட்டும் அவனுவளுக்கும் மாஸத்துக்கு சம்பளம் தரட்டுமாம். களவான்ட ஏலாப் போக்கொல பென்சன செஞ்சி தரட்டுமாம். அடுத்தது அவனுவள் கேக்குறானுவள் பெரிய பெரிய கள்ளனுவள கவனிக்கிற மாதிரி அவனுவளே கவனிக்கட்டுமாம். களவன்டி மாட்டினா அடிக்க, பொலிஸுக்கு கொண்டு போவ கூட்டுல போட வாணமாம்.”
“அடேய். மாற விசயமொன்டே டா. இன்டகி நசக்காரன பாக்கப்போவ தேவல்ல. அத நாளக்கி போட்டுகொளுவோம். நசகாரனுக்கு இன்டகி சாவுற அளவுக்கு வருத்தமில்லயே. வா முன்னூ போம். இன்டகி இத நல்லா பாபொம்.”
“போம் போம்.. பாத்துட்டு போனா அவனுவள்ட கதேம் நூத்துக்கு நூறு வீதம் உண்ம தானே டா.”
“அதுதானே, அவனுவளக்கு கள்ளன் கள்ளன் என்டத்துக்கு, அவனுவளுக்கு மூள ஈக்குறு டா இந்த நாட்டுலீக்கிற அமைச்சர்மாற விட.”
“ஆ… அங்க பாரு அங்க பாரு மனிசர, அங்கலேம் இங்களேம் கொழம்பி ஓடுறாங்கொ.”
“அடேய் பொலிஸால பாஞ்சிடா.”
“ஆ.. அப்ப ‘பிகடினு’ம் முடிஞ்சிடும். இன்டகே நசக்காரன பாக்கேலுமாவும் போல.”
“ஏய் எங்கடா ஏன்ட பேர்ஸ் இல்ல.”
“ஏ… ஐயோ டா ஏன்டயும் இல்ல.”
“ஐய்யோ”
“பேபி பேபி எனாத்தடா மஹனே கத்துற. கெட்ட மனா எனாசரி கண்டா?”
“நா? இல்லும்மா.”
“நானும் நல்லாப் பயந்த. ஓதியூதிக்கொண்டு படு.”
சல்மான் அடுத்த சைடுக்கு திரும்பி நல்லா பொடவயால போத்திக் கொண்டது மனால கத்தின வெக்கத்திலயா? இல்லாட்டி கூதலுக்கா? என்டு சல்மானுக்கு மட்டுந்தான் தெரீம்.
(ஊழலை இப்படியும் சொல்லலாம்)
2017.05.02 ஆம் திகதி “லங்காதீப-வீமங்ஸா” வில் வெளியான ஒரு சிறுகதையை தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது. அதனை எனதூர் மொழியில் மொழிபெயர்க்கலாம் போலத் தோன்றியது. ஊர் மொழியை யோசித்து யோசித்து மொழிபெயர்க்க வேண்டியேற்பட்டதால் இச் சிறுகதைக்கு ஒரு மணி நேரம் சென்றுவிட்டது. இருப்பினும் சிறப்பாக வந்திருக்கும என நினைக்கிறேன். மூலக் கதையில் வரும் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியுள்ளேன். “யகா” என்ற சொல்லை “பேயன்” என்று மொழிபெயர்க்கலாம். இருப்பினும் எமது பகுதியில் அச் சொல் பாவனையில் இல்லை என்பதால், அதனைத் தவிர்த்து “மச்சான்” என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளேன்.)