மதிப்பெண்களின் மாயம்.
1 min readகல்வி என்பது அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய மூன்றிலும் நேர்நிலை மாற்றங்களை உருவாக்குவதாய் அமைய வேண்டும்.
வாழ்வின் முன்னேற்றம் இம்மூன்றினதும் முன்னேற்றம் மட்டுமே அல்ல. அவை தகுந்த அடிப்படையில் பயன்படுத்திக் கொள்வதிலும் இருக்கிறது.
‘பரீட்சை’ என்பது திறமையின் அளவையும், அறிவின் அடைவையும் கண்டுபிடிக்க உபயோகிக்கும் ஒரு முறைவழியாகவே நம் மாணாக்கர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதிப்பெண்களை அவற்றின் அளவுகோளாகவே நினைக்கிறார்கள். மதிப்பெண் குறைந்தால் அறிவும் திறனும் குறைந்துவிட்டது என்றும் வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என்றும் எண்ணிவிடுகிறார்கள். இது பிழையான ஒரு மனப்பதிவு.
மதிப்பெண்கள், உங்கள் முயற்சி, கிரகத்தில், மீட்டலின் அடைவே அன்றி உங்கள் புலமையின் அளவல்ல. உங்கள் இயலுமையின் அளவும் அல்ல.
பிறக்கும் போதே ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு வகையான திறமைகள் காணப்படுகின்றன. அவற்றை மிகச் சரியாக அடையாளம் கண்டு, விருத்திசெய்து, பிரயோகித்தால் அதுவே மிகச் சிறந்த வெற்றியாக நான் காண்கிறேன். இப்படி வென்றவர்கள் தான் வரலாற்றில் நிலைத்தும் இருக்கிறார்கள்.
பரீட்சையில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றவர்கள் கூட அவர்களது திறமை, இலக்கு என்பவற்றை அடையாளங் கண்டுகொள்ளத் தவறியதால் வாழ்க்கையில் தோற்று விடுகிறார்கள்.
பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றவர்களும், பெறாதவர்களும் தம் இயலுமைகளை கருத்தில் கொண்டு இலக்கை அடையாளம் கண்டு முன்னேற சிந்தியுங்கள். இத்துடன் பயணம் முடிவடைந்துவிடவில்லை.
மதிப்பெண்கள் உங்களை மயக்காதிருக்கட்டும். உள்ளத்தில் உறுதி இருந்தால், இலக்கில் தெளிவு இருந்தால் கண் முன் ஆயிரம் வாய்ப்புகள் இருக்கின்றன.
பரீட்சையில் சிறந்த சித்தியடைந்தால் பல்கலைக்கழக அனுமதி. தவறினால் பல்கலைக்கழகத்தில் தொடர் தொலைக்கல்வி, பல்கலைக்கழகத்தில் ஏதாவது (course) பாடநெறி, கல்விக் கல்லூரி மற்றும் தொழில் நுட்ப கல்லூரி அனுமதிகள், இல்லையா மீண்டும் முயற்சித்தல் என வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன.
முயற்சித்தால் உடனோ தாமதித்தோ வெற்றி நிச்சயம்.
சாதிக்க நினைத்த சகலருக்கும் வாழ்த்துக்கள்!
அன்புடன்,
இஸ்பஹான் சாப்தீன்