எழுத்தாளனுக்கு..!
ஏய்..!
ஒரு நூறு புத்தகங்களாவது
வாங்க வேண்டும்
இம்முறை.
ம்…
வாங்கலாமே..
வாப்பா தந்த மாலை,
நீங்க தந்த வளையல்,
தோழி போட்ட மோதிரம்
எல்லாமிருக்குது
அடகுக் கடையில்.
ப்..ப…
ஆயிரம் புத்தகங்களை
வாசித்துவிட்டேன்
அந்த நொடியில் மட்டும்
உன் முகத்தில்
ஒவ்வொரு முறையும் போலவே.
2016.09.15