பார்வையற்றோருக்கு புதுவாழ்வு வழங்கும் Green Flowers Sri Lanka.
1 min readபார்வையற்றோருக்கு புதுவாழ்வு வழங்கும் Green Flowers Sri Lanka.
#
Green Flowers Sri Lanka விழிப்புலன் அற்றோரால் விழிப்புலன் அற்றோருக்காக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இவர்களது பத்திரிகையாளர்களுடனான சந்திப்பு நேற்று(26) மாலை கொழும்பு AMYS கேற்போர்கூடத்தில் நடத்தப்பட்டது. இதன் போது Green Flower Sri Lanka அமைப்பின் சிரேஷ்ட தலைவர் அப்துஸ் ஸலாம் மற்றும் தலைவர் எம்.ஏ.எம் மிஸ்தாக் ஆகியோர் உரையாற்றினர்.
2007 ஆம் ஆண்டு “முஸ்லிம் விழிப்புலன் அற்றோர் அமைப்பு” என்ற பெயரில் இது உருவாக்கபட்டது. பின்னர் தேசிய ரீதியில் இயங்கும் ஒரு அமைப்பு என்ற வகையிலும் பலரின் ஆலோசனைப்படியும் முஸ்லிமல்லாத விழிப்புலன்ற்றோரும் சில பயன்களைப் பெறுவதாலும் 2010 ஆம் ஆண்டு Green Flowers Sri Lanka என்று பெயர் மாற்றப்பட்டது.
‘வலதுகுறைந்தோரின் உரிமைகளைப் பெற்றுக்கொடுத்தல்’ என்ற அனுமதியின் கீழ் பதிவுசெய்து இயங்கிவருகிறது. 14 நிருவாக உறுப்பினர்களுடன் 200 அங்கத்தவர்களுடன் இயங்கிவரும் இவ்வமைப்பின் தலைமையகம் சம்மாந்துறையிலும் விசேட பயிற்சி நிலையம் அக்கரைப்பற்றிலும் காணப்படுகிறது.
பசுமையும் மலர்வும் நிறைந்த நம்பிக்கையுடன் ‘அங்கவீனம் பலவீனமல்ல’ என்ற தொனிப்பொருளில் இயங்கிவரும் இவர்கள், பார்வையற்றோர் என்று காட்டிக்கொள்ள விரும்பவில்லை என குறிப்பிடுகின்றனர்
இவ்வமைப்பு ஏன் எதற்கு?
* தேசிய ரீதியில் பார்வையற்றோருக்கான பல நிறுவனங்கள் காணப்பட்டன ஆனால், முஸ்லிம் விழிப்புலன்ற்றோருக்கான அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஒரு அமைப்பு இருக்கவில்லை.
* வீடுகளில் முடங்கிய நிலையில் தனிமைப்பட்டு இருப்போரை சமூகத்தில் ஏனையவர்கள் போல் வாழச்செய்தல்.
* அவர்களது இயலுமைகளை அடையாளங்கண்டு பயிற்சியளித்து தொழில்முனைவோராக மாற்றுதல்
* அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, இடர்களை குறைத்தலும் தீர்வு பெற்றுக் கொடுத்தலும்.
* பார்வையற்றோரும் சாதிக்கலாம். மற்றவர்களுக்கு சரிசமமாக வாழலாம். முடியுமானவரை இன்னொருவரில் தங்கியிருக்காமல் சுயமாக செயல்படலாம் என்ற வகையில் வழிகாட்டுதல்.
* ஏமாற்றப்படுகிறார்கள். பார்வையற்றோரின் உணர்வுகள் தேவைகள் அவதானத்தைப் பெறுவதில்லை. எனவே, அநேகமானோரின் எண்ணங்களும் தேவைகளும் நிறுவன செயற்பாட்டின் மூலம் நிறைவு செய்ய முடியுமாக இருக்கும்.
* கல்விரீதியாக விசேட கற்றல் முறை என்ற பெயரில் பிரித்து கற்பிக்கிறார்கள். அப்படி ஒருமுறை அவசியமில்லை. நம்மாலும் மற்றவர்களுடன் சேர்த்து சாதாரண பாடசாலைகளில் கற்கலாம் என்ற விடயத்தை முன்வைத்தல்.
போன்ற காரணங்களுக்காகவே இவ்வமைப்பை உருவாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
மேலும், இது சமூகம் செய்ய வேண்டிய ஒரு வேலை. சமூகம் செய்யாததால் நாமே செய்து வருகிறோம். நம்மை தட்டிக்கொடுக்க பின்வாங்குகிறார்கள். முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அவர்கள் நினைத்தால் மாற்ற முடியாத எதுவுமில்லை. முன்னர் நாம் படிக்கும் காலத்தில் பாரவையற்றோர் என்றால் பரிகாசம் செய்வார்கள் கல்லெறவார்கள் தள்ளிவிடுவார்கள் என்ற நிலையே இருந்தது. ஆனால், இன்று அல்லாஹ்வின் கிருபையால் நிலமை மாறியுள்ளது. தமது கரங்களால் பிடித்து உதவுகிறார்கள்.
எனவே, இவ்விடயத்திலும் இவர்களது கவனம் குவிந்தால் குறுகிய காலத்திலேயே மாற்றங்களைக் காணலாம். யாரவது முனவந்து நாங்கள் செய்கிறோம் என்றால் நாம் அவர்களிடம ஒப்படைக்கவும் தயாராக இருக்கிறோம்.
செயற்பாடுகள்.
# 6-14 வயதுக்கு உட்பட்ட விழிப்புலனற்ற மாணவர்களை சாதாரண பாடசாலைகளில் கற்கச் செய்தல். விசேட கல்விமுறை மூலம் தனிமைப்பட்ட நிலையில் கற்றாலும் உயர்கல்வியை சாதாரண மாணவர்களுடன் இணைந்தே கற்க வேண்டியுள்ளது. இலங்கை யாப்பின் படி (Inclusive Education) ஒன்றிணைக்கப்பட்ட கல்விமுறை எல்லாப் பாடசாலைகளிலும் அமுல்படுத்தப்பட வேண்டுமென்று கூறப்பட்டள்ளது. எனவே இவ்வுரிமையை பெற்றுக் கொடுக்க இந்நிகழ்ச்சி த்திட்டத்தை நடாத்தி வருகிறோம். தற்போது பலர் இதன்மூலம் பயனடைந்து வருகின்றன ர். பலர் O/L, A/L மற்றும் BA வரை சாதாரண மாணவர்களுடன் படித்து சித்தியடைந்துள்ளனர். ஒன்றரை வருடங்கள் குற்றெழுத்துப் பயிற்சி மற்றும் சுயமாக இயங்குவதற்கான பயிற்சிகளை வழங்கி அவரவர் பிரதேச பாடசாலைகளில் சாதாரண மாணவர்களுடன் இணைந்து கற்க வழிகாட்டி வருகிறோம்.
# 15-20 வயதுக்குற்பட்டவர்களுக்கு கணனிப்பயிற்சி (Screen Reader மூலம்), தானாக இயங்கும் வகையில் சுயநல மாற்றப் பயிற்சி மற்றும் விளையாட்டு போன்றவற்றை நடாத்தி வருகிறோம்.
# 28-43 வயதுக்குற்பட்டோருக்கு அவர்களது திறமைக்கு ஏற்ப சுயதொழில் வாய்ப்புக்களை வழங்கல். வருடத்தற்கு 5 பேர் பயனடைகின்றனர்.
இப்படியாக சுமார் 200பேரளவில் பயனடைகின்றனர். நாட்டில் பல பிரதேசங்களில் இருந்தும் பயிற்சிநிலையத்துக்கு வருகை தருகின்றனர்.
கோரிக்கைகள்
> விழிப்புலன்ற்ற பிள்ளைகளை வீட்டில் முடக்கி வைக்காமல் கட்டாயம் எமது நிலையத்தில் சேர்த்து அவர்களுக்கு கல்வியைக் கொடுத்து அவர்களது உரிமையை பெற்றுக்கொடுக்குமாறும் சாதாரண பிள்ளைகளுக்கு எந்தளவு உரிமையும் சுதந்திரமும் உள்ளதோ அதனை வழங்குமாறும் வேண்டிக்கொள்கிறோம்.
> பார்வையற்றோருக்கும் உணர்வுகள், தேவைகள் இருக்கின்றன. அவற்றை அறிந்து வாய்ப்புக்களை வழங்கி சமமாக நடாத்தப்பட வேண்டும்.
> எமது அமைப்பின் செயற்பாடுகளுக்கு மாதாந்தம் சுமார் ஒரு லட்சத்து இருபதாயிரம் செலவாகிறது. வருமானம் இன்மையால் துண்டுவிழும் நிலையியே காணப்படுகின்றது. நமது தேவைகளை கேட்டு நிவர்த்தி செய்ய தட்டிக் கொடுக்க முன்வர வேண்டும்.
> நமக்கு வாசிக்க முடியுமான குற்றெழுத்து வடிவில் நூல்கள் இல்லை. நூல்கள் எழுதவேண்டிய தேவை இருக்கிறது. Brail அல்லது Talking Books இருந்தால் நமக்கு உதவியாக இருக்கும். Brail Printer ஒன்று பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால் பேருதவியாக இருக்கும்.
தொடர்புகளுக்கு:
Special Training Centre,
21 Bathr Mosque Road,
Akkaraippatthu.
0712245880, 0752266488
ho.gfsl@gmail.com
நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம். நாம் எமது திட்டங்களில் இப்படியானவர்களின் விவகாரங்களை உள்வாங்கியிருக்கிறோமா? சற்று சிந்திப்போம்!
-இஸ்பஹான் சாப்தீன்-