வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி
1 min readவெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச ஊடகவியலாளர்களுக்கு உதவும் நோக்கிலும் அவர்களை கௌரவிக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி நேற்று 19.07.2016 அன்று காலை 10.00 மணியளவில் கொழும்பு அல் ஹிதாயா பாடசாலையில் இடம்பெற்றது. இதனை கலாசார மற்றும் அபிவிருத்திக்கான முஸ்லிம் நிறுவனம் (MFCD) ஏற்பாடு செய்திருந்தது. இன, மத, மொழி பேதமின்றி, கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சகலரும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.