01. “மாலை”ப் பிரபந்தம்
1 min readஇஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாறு:
மாலை-01
இஸ்லாமிய தமிழிலக்கியப் பிரபந்த வகைகளுள் “மாலை”ப் பிரபந்தம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. அதற்கு இரு காரணங்கள் உண்டு.
01. அதிகமான இஸ்லாமிய தமிழ் இலக்கிய வெளியீடுகள் “மாலை” ப் பிரபந்த வகை.
எனது தேடலுக்கு உட்பட்ட வகையில் சுமார் 250இற்கும் அதிகமான “மாலை” ப் பிரபந்த நூல்களின் பெயர்களையும் அவற்றை யாத்த புலவர்களின் பெயர்களையும் திரட்டியுள்ளேன்.
02. தமிழ் மொழியில் ஆக்கப்பட்ட முதலாவது இஸ்லாமிய தமிழ் இலக்கியம் ‘மாலை” ப் பிரபந்த வகையைச் சார்ந்து.
முஸ்லிம் புலவர் ஒருவரால் இயற்றப்பட்ட முதலாவது இஸ்லாமிய தமிழ்ப் பிரபந்தம் “மிஃராஜ் மாலை’ ஆகும். இது ஹிஜ்ரி 1000ல் ஆலிப் புலவரால் இயற்றப்பட்டது.
இந்துத் தமிழ்ப் புலவர்களால் இயற்றப்பட்டு வந்த இந்த மாலைப் பிரபந்த முறை வழியை இற்றைக்கு சுமார் 430 வருடங்களுக்கு முன்தான் முதன் முதலாக முஸ்லிம் புலவர்களாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளவர். மாலைப் பிரபந்தங்களுள் அடங்கும் இலக்கண அணிகலன்கள் ஆரம்பகால மாலைகளில் பின்பற்றப்பட்டு வந்தாலும் பிற்பட்ட காலங்களில் பெரும்பாலும் கைக்கொள்ளப்படவில்லை. இலக்கண அணிகலன்களின் அடிப்படையில் மாலை பல வகைப்படும்.
உதாரணமாக…
- அங்க மாலை
- பன்மணி மாலை
- இணை மாலை
- மும்மணி மாலை
- வசந்த மாலை
- நவமணி மாலை
போன்ற சில முறைமைகளையும் கூறலாம். இவற்றை கையாண்டு இஸ்லாமிய மயப்படுத்திய முஸ்லிம் புலவர்கள் ‘மாலை’ க்கு புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தனர் எனத் துணிந்து கூறலாம்.
தொடரும்…