இன்னும் #மனிதம் இருக்கிறது. இன்னும் #மனிதர்கள் வாழ்கிறார்கள்.
1 min read18 காலை, வெல்லம்பிடிய சந்தியில் ஒரு ஹாஜி, நான் மூன்று Boats போட்டிருக்கிறேன். மற்ற ஹாஜி 10 Boats போட்டிருக்கிறேன் என மக்கள் பார்த்திருக்க வாய்த்தகராறில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எந்த ஒரு Boat உம் வந்திருக்கவில்லை. நானும் பக்கத்தில் இருந்த சகோதரரும் பேசிக்கொண்டோம். எழுதாத Paper கு எப்படியெல்லாம் Marks போட்டுக் கொள்கிறார்கள்!
அவிஸ்ஸாவெல்ல பிரதான வீதி கடும் போக்குவரத்து நெரிசலாக இருந்தது. பொலிஸ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நெரிசலைக் குறைத்திருக்கலாம். களுத்துறை, பேருவளை மற்றும் நீர் கொழும்பு என பல பிரதேசங்களில் இருந்து வந்த Boats சுமார் ஒன்றரை மணி நேரம் நெரிசலில் சிக்கியதால் குறித்த நேரத்திற்குள் வந்து சேர முடியாமல் போனது.
பலரும் கொண்டுவந்திருந்த படகுகளை கடற்படையினர் தம் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஒரு கடற்படை வீரரையேனும் ஏற்றி மீட்புப் பணியில் அமர்த்தியிருக்கலாம். ஏனெனில், சில இடங்களில் தலைக்கு 5,000 ரூபாய் பெற்று படகில் ஏற்றிய சம்பவங்களும், படகில் மீட்புப் பணிக்காக வந்தவர்களை கல்லடித்து துரத்திய சம்பவங்களும் (நாமும் ஒரு கட்டத்தில் கல்லடி வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.) சில இடங்களில் கொள்ளையடிக்கவும், விநோதத்திற்காகவும் வந்தவர்களது அடாவடிகள் இடம் பெறாமலில்லை. தூய்மையான நோக்கோடு இரவு பகலாக மக்களை மீட்பதற்காக Life Jacket கூட இல்லாமல் போராடிய இளைஞர்களுக்கு இந்நிகழ்வுகள் பெரும் இடையூறாகவே அமைந்திருந்தன.
“நான் கஷ்டப்பட்டு பொய் சொல்லி ஒரு Boat இல் ஏறி உள்ளே போய் வந்தேன்.” ஏண்டா? “மச்சான் ஒரு சாராய போத்தல் வாங்க காசு இருக்கல்ல. வீட்டுக்கு போய் எடுத்து வந்தேன்.” என்று டீக்கடையில் ஒருவன் பேசியதைக் கேட்டு சகோதரர் ஒருவர் என்னிடம் கடிந்து கொண்டார்.
சில இடங்களில் கையில் சாராய போத்தலோடு நீரில் இருந்தபடி வருவோர் போவோரை வம்புக்கு இழுத்த, Boatsஐ பலவந்தமாக திசை திருப்பி குழப்பம் செய்த சில விஷமிகளும் களத்தில் இருந்தனர்.
ஒரு Boat இல் வந்து தமக்கு தேவையானதை பெற்றுக் கொண்டு மற்ற Boat இல் ஏறி உள்ளே சென்று Fun எடுத்த சிலரையும் அவதானிக்க முடியுமாக இருந்தது.
தமது வீட்டை விட்டு வெளியேற விருப்பம் இன்றி புதையல் காக்கும் பாம்புகள் போல் மேல் மாடிகளில் தங்கியிருந்து மீட்புக்காக வரும் போகும் Boats களில் உள்ளவர்களிடம் மூன்று நேரமும் உணவுப் பொருட்களை கொண்டு வந்து தருமாறு பணித்தவர்களும் இருந்தனர்.
சில இடங்களில் மக்கள் இரண்டு நாட்கள் கடந்தும் மீட்க முடியாத நிலையில் இருந்தனர். அந்த இடங்களுக்கு படகுகள் போக முடியாத நிலை. எனவே, இப்படியான சந்தர்ப்பங்களில் விமானப் படை உதவியிருக்கலாம். ஆனால், விமானப் படை நிவாரணப் பொதிகளை இறக்கும் வேலையை மாத்திரமே சில இடங்களில் செய்தது.
எது எவ்வாறு இருப்பினும் உயிர்களைக் காப்பாற்றுவதில் இளைஞர்கள் செய்த பணி என்றென்றைக்கும் மறக்க முடியாது. அரசை எதிர்பார்த்திருந்திருந்தால் இரண்டு அல்ல நூற்றுக்கணக்கான உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்கும். இளைஞர்கள் செய்த இந்தத் தியாகம் கடந்த காலங்களில் ஏற்பட்ட பல கசப்பான அனுபவங்களை துடைத்தெறிந்தது. 20 அன்று மாலை கடற்படைத் தளபதி ஒருவர் கூறினார். “பார்க்க எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. எந்த இன மத பேதமும் இன்றி மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். எனக்குத் தெரிந்தது இரண்டே இரண்டு சாதி தான். ஒன்று ஆண் சாதி மற்றது பெண் சாதி.” செய்த பணிக்கு இந்த ஒரு வார்த்தை போதுமென்று தோன்றியது. இன்னும் மனிதம் வாழ்கிறது. இன்னும் மனிதர்கள் வாழ்கிறார்கள்.