ஞானி… விஞ்ஞானி…
மலை, வனம், நதி, மழை என இந்த இயற்கை எத்தனை எத்தனை அதிசயங்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.
ஆன்மா குதூகலிக்கும் சப்தத்தை, நீரின் சலசலப்பிலும் இலைகளின் சரசரப்பிலும் என்னால் உணர முடியுமாக இருக்கிறதே. எப்படி?
வெயிலின் நீட்சியிலும் மழையின் ஆட்சியிலும் மட்டும் கையேந்தத் தெரிந்து வைத்திருக்கும் எனக்கு ஒரு மரம் நட்ட, ஒரு துளி மழையை சேமிக்க முடியாமல் போனதேன்?
இறைவனின் மாட்சிமையைச் சொல்ல வேறெந்த பாசை வேண்டும்? ஒவ்வொரு படைப்பும் அவனைச் சொல்லும் பாசைதானே!
புரிந்து விடும் பொழுது ஞானியாகிறோம். அறிந்து விடும் போது விஞ்ஞானியாகிறோம்.
17.05.2016
இஸ்பஹான் சாப்தீன்