என் உயிர் தாயே! எனை உயிர்த்தாயே!
என் உயிர் தாயே!
எனை உயிர்த்தாயே!
#
உன் கண்ணில்
என் இரவு மறையட்டும்.
மறு கண்ணில்
என் வைகறை புலரட்டும்.
உன் தோளில்
என் தோல்வி தோற்கட்டும்.
மறு தோளில்
என் வெற்றி நிலைக்கட்டும்.
உன் கரத்தில்
என் கவலை அமையட்டும்.
மறு கரத்தில்
என் மகிழ்ச்சி தவழட்டும்.
உன் சிரிப்பில்
என் கோபம் தணியட்டும்.
உன் அணைப்பில்
என் உயிர் பிரியட்டும்.
உன் காலில்
என் உயர்வு கிடக்கட்டும்.
மறு காலில்
என் சுவனம் கிடைக்கட்டும்.
இஸ்பஹான் சாப்தீன்
2016.05.08