நீர்ப் பாச நம்.
#
நதிகளை சுமக்க
குளங்களை செய்த
பராக்ரம பாசமும்
நமக்கில்லை.
மழை முடிந்த பின்பும்
துளிகளை சுமக்கும்
மரங்களின் பாசமும்
நமக்கில்லை.
இதனால் அல்லவோ!
குளங்களைக்
கட்டுவதுமில்லை.
மரங்களை
நட்டுவதுமில்லை.
வரும் அப் பாசம்
மறு தலைமுறைக்கு.
மருந்துக் கடைகளில்
சொட்டு நீர் விற்கையில்.
04.05.2016