இஸ்பஹான் வாழ்த்தப்பட வேண்டும்.
1 min readதென்னகத்தின் நம்பிக்கை ஒளிக்கீற்று இவன்..
தெவிட்டாத பத்திகள் தருபவன்…
தமிழை நேசிக்கும் தங்கமனத்தான்…
தெள்ளுதமிழில் கவிபடைப்பவன்…
கற்றலுக்காய் கல்வியைத் விரிப்பதற்காய்
காலத்தில் மின்னிநிற்கும் இளவலிவன்…
காலிமாநகர் தந்த கலைஞனிவன்…
இவன் படையல்கள்
இஸ்லாத்தைச் சொல்லும்
இங்கிதமாய்த் தமிழ்ச் சொல்லும்
இவன் அணைப்பு
இம்மை மறுமை இரண்டுக்குமாய்…
மாணவர் கல்விக்காய்
மாண்புறு பணியாற்றுபவன்
மண் வளர்ந்தோங்க
மட்டிலாதன ஆற்றுபவன்
சுதந்திர ஊகடவியலாளனாய்
திருமறை ஒளியில் தமிழ் தருபவனாய்
“பெரியோ”ரையும் விஞ்சும் எழுத்தாளனாய்
அலட்டிக் கொள்ளாமல்
நிலத்தில் பவனி வருபவன்
இந்த இஸ்பஹான் ஷாப்தீன்…
இவன் சொற்புதையல்கள்
இகத்து எலோருக்கும்
இனிதாய்ப் போய்ச் சேர வேண்டும்…
இங்கிதமாய் மனங்கள் மணம்கொள
இஸ்பஹான் வாழ்த்தப்பட வேண்டும்..
இறைவன் அருள்மிகப் புரிய
இஸ்மாயில் எம். பைரூஸ்
இனிதாய் வாழ்த்திட்டனன்.
-கலைமகன் பைரூஸ்
02.05.2016