#என் கவிதைகளில் நீ!
#என் கவிதைகளில் நீ!
”””””””””””’
எப்படிப்
பார்த்தாலும்
புரியாத
சித்திரம் போல்
காணாதபடி
ஒழிந்திருக்கிறாய்
நீ.
செத்த
பின்பும்
சிரித்திருக்கும்
நண்பனின்
புகைப்படம் போல்
சிரித்தபடி
வரவேற்கிறாய்
நீ.
அழகழகாய்
வடித்த பின்
அசையாதிருக்கும்
சிலை போல்
அசைவற்றுக்
கிடக்கிறாய்
நீ.
எங்கிருந்து
பார்த்தாலும்
எனைப் பார்க்கும்
ஓவியம் போல்
விழி தீட்டிப்
பார்க்கிறாய்
நீ.
பெருங் கவியின்
கவிதைக்குள்
பொதிந்திருக்கும்
ஹைக்கூ போல்
வரிக்கு வரி
வருகிறாய்
நீ.
மெனக்கெட்டு
எழுதினாலும்
வந்து விடும்
எழுத்துப் பிழை போல்
எப்போதும்
வருகிறாய்
நீ.
என் கவிதைகளில்..!
2016.04.29
இஸ்பஹான் சாப்தீன்