பொறுப்புத்துறப்பு.
காகம் குளிக்கும்
ஆழக் குளங்கள்
எங்கள் ஊர்
பாதை நெடுகில்.
கல்விக் கடைகளின்
விளம்பர ஒட்டிகள்
வழிகாட்டிப் பதாகையை
மறைத்தபடி.நுளம்புகளின்
பிரசவ ஆஸ்பத்திரி
நீரோடாத
பள்ளிக் கால்வாய்.
ஆழக் குளங்கள்
எங்கள் ஊர்
பாதை நெடுகில்.
கல்விக் கடைகளின்
விளம்பர ஒட்டிகள்
வழிகாட்டிப் பதாகையை
மறைத்தபடி.நுளம்புகளின்
பிரசவ ஆஸ்பத்திரி
நீரோடாத
பள்ளிக் கால்வாய்.
விடிந்தாலும்
வெளிச்சம் தரும்
கடமையுணர்வுள்ள
மின் கம்பம்.
பொதுச் சொத்து
எங்கள் சொத்து
பஸ் இருக்கையில்
எனது ஒப்பம்.
வழி நெடுகிலும்
அலங்காரக் கொடிகள்
ஏழைச் சிறுவனின்
மானம் பறக்கிறது.
அது செய்வோம்
இது செய்வோம்
எதுவும் செய்யாதபடி
அமைச்சரின் படம்.
இஸ்பஹான் சாப்தீன்
2016.04.21