December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

சமூக ஆர்வலர் முத்துக்கிருஷ்ணன் உடனான சந்திப்பு

1 min read

http://isbahan.com/wp-content/uploads/2016/04/12417531_10204329895688023_4671781020675855617_n.jpg

“முத்துக்கிருஷ்ணன்” தமிழகத்தை சேர்ந்த ஒரு புரட்சி எழுத்தாளர், ஊடகவியலாளர், சமூக ஆர்வலர், இயற்கை விரும்பி என இவரைப் பற்றி பேசிக்கொண்டே போகலாம்..

மறைக்கப்படும் பல விடயங்களை அல்லது அநீதிகளை தன் எழுத்துக்களால் மட்டுமன்றி, பேச்சாலும் பூட்டுடைத்தவர். மிக எளிமையானவரும், தனக்கான எதிர்பார்ப்புக்கள் எதுவும்இல்லாத சமூக சிற்பியுமாவார்!

http://isbahan.com/wp-content/uploads/2016/04/12920516_10204329897208061_3264772974640239468_n.jpg

அண்மைய இவரது இலங்கை விஜயத்தின் போது பலஸ்தீனுக்கு 10,000 கிலோமீட்டர் சாலை வழிப் பயணம் சென்ற அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்டார். குரலற்றவர்களின் குரலாக, தான் இருக்கவேண்டும் என்ற இலக்கை கொண்டிருக்கும் இவர், தான் மரணிக்க முன்னர் அனைத்து தேசங்களினதும் மண்ணை மிதித்துவிட வேண்டும் என்கிற ஆசையுடன் இருப்பவர்.

http://isbahan.com/wp-content/uploads/2016/04/12920353_10204329896768050_8729483879637890794_n.jpg

இவரது குரலோங்கிய சில நிகழ்ச்சிகள் இதோ..

MAKKAL TV நிகழ்ச்சியில் :- https://youtu.be/1pEIpvlO7O8 (பாகிஸ்தான் பயண அனுபவம் பற்றி)

MAKKAL TV நிகழ்ச்சியில் :- https://youtu.be/omOOemhG2DI (பாலஸ்தீன, காஸா பயண அனுபவம் பற்றி)

VIJAY TV நிகழ்ச்சியில் :- https://youtu.be/1Jh2ieI56NM (அண்ணா ஹசாரே நல்லவரா??)

பொது மேடையில் :- https://youtu.be/BiFOzCNMf_w (அணு உலை ஆபத்து)

Che Guevara – Film by Muthukrishnan :- https://youtu.be/dUGwwZvKV30

GREENWALK WATER FEST TEASER :- https://youtu.be/objuxybBPUY
(“பசுமை நடை” எனும் மாபெரும் நடைப் பயணம். பல குடும்பங்கள் சகிதம் காடு,மேடுகள், கோயில்கள், குளங்கள் என தொல்லியல் உண்மைகளை தெளிவுபடுத்தும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். வரலாற்றை ஏடுகளில் படித்தோருக்கு அவற்றை பாதுகாக்க வேண்டியதன் யதார்த்தத்தை இதன்மூலம் நிறுவ முனைகிறார்)

Puthiya Thalaimurai TV நிகழ்ச்சியில் :- https://youtu.be/G5Mxc6HYBR0 (கட்சி இலட்சினைகளை பொதுச் சொத்துக்களில் பொறித்தல் தொடர்பில்)

இவ்வாறு நீண்டு கொண்டே செல்கின்றது அவரது பொதுப் பணிகள்…! இவரது மனைவி இந்திய பல்கலைக்கழக பேராசிரியர் என்பது கூடுதல் செய்தி! சமூக மாற்றம் என்பது தனி நபரில் இருந்து முதலில் குடும்பத்தில் வேரூன்றி, அது சமூகம் நோக்கிப் பாய வேண்டும் என்கிறார் உயிரோட்டமிக்க சிந்தனைகளின் சொந்தக்காரர்!

Description: Anas Abbas
Thanks Insaf Salahudeen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed