எதுபோலும் அற்றது இந்த நதி,
எதுபோலும் அற்றது இந்த நதி,
கூழாங்கற்களின் நீச்சல்
பொன்னிற மணல் திட்டு
பசிய மரங்கள் சூழ
எதுபோலும் அற்றது இந்த நதி.
கூழாங்கல் சிராய்ப்பும்
மண்பஞ்சு மெத்தையும்
மனசுவரை படரும் காற்றும்
வெம்மையற்ற வெயிலுமாய்
எதுபோலுமற்றது இந்த நதி.
இன்னும் நதி வாழ்கிறது.
மனிதர்கள் கண்டுவிடக்கூடாது.
குளிர்ச்சி நிரம்பிய நதி.
கூழங்கள் போடப்படாத
எதுபோலுமற்றது இந்த நதி.