தலை கவிழ தமிழ் செய்து காட்டு!
ஏடெடுத்து
உன் கருத்தை ஏற்று!
அதில், பாட்டெடுத்து
உன் திறத்தைக் காட்டு!
விழி துடைக்க
உன் கரத்தை நீட்டு.
வழி காட்ட
உன் கவி மரத்தை நாட்டு.
ஜகம் வென்றெடுக்க
உன் சிறத்தை கூட்டு!
பலர் தலை கவிழ
தமிழ் செய்து காட்டு!
வீழாது
தலைநிமிர்ந்து காட்டு!
நீ வீழ்ந்தாலும்
தலைநிமிர்ந்து காட்டு!
வீசும் இனி
உன் திசையில் காற்று!
ஊர் பேசும் உனைப்பற்றி
மேடை போட்டு!
இஸ்பஹான் சாப்தீன்
2016.03.07