கடல் தாண்டி ஓருளத் துடிப்பு!
1 min readகதிரவனின் சுட்டெரிப்பு
கறு இரவின் குளிர்கதப்பு
கட்டாந்தரைக் கல்லுடைப்பு
கை நிறைய தோலரிப்பு
கடல் தாண்டி என் பிழைப்பு
கடன் அடைக்க இவ்வுழைப்பு.
காசுக்காரனாய் நினைப்பு
காசு தராது உன் அணைப்பு.
கைபேசியில் உன் அழைப்பு
கடத்தி விடும் என் களைப்பு.
கலர் படத்தில் உன் சிரிப்பு
கவலை வரின் கையிருப்பு.
காணாத உன் தவிப்பு
கனவுகளின் ஆர்ப்பரிப்பு.
கண்ணீரின் கதகதப்பு
கண்ணே! இது உன் நினைப்பு!
காத்திருந்தே வயதிழப்பு
காலமே! வாழாது வாழ்விழப்பு!
கடுந் தனிமைப் பரிதவிப்பு
கவிதையாய் இதோ, இப்படைப்பு!
அன்புடன்,
இஸ்பஹான் சாப்தீன்
28.01.2015
www.isbahan.com