பசங்க-2
1 min readகுழந்தைகளுக்கு இப்போதெல்லாம் விளம்பர அம்மாக்களைத்தான் பிடித்திருக்கிறது. அவர்கள்தானே சிரித்துக்கொண்டே சாப்பாடு ஊட்டுகிறார்கள்.
நம் அவசர வாழ்க்கையில் குழந்தைகளால் இடைஞ்சல் வராமல் இருக்க எப்படி எல்லாம் குழந்தைகளை சமத்தாக்கப் பார்க்கிறோம்.
துறுதுறுக் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உச்சபட்ச தண்டனை ஹாஸ்டல் சிறை. (நம்மூர்ல மத்ரஸா)
குழந்தை குழந்தையாக இருந்துவிடக்கூடாதே!
மெடிக்கல் மாபியாக்கள் உருவாக்கும் புதுப்புது பெயர்களிலான நோய்களுக்கு நம் அப்பாக்கள் எப்படியெல்லாம் சிக்கிக் கொள்கிறார்கள்.
நம் ஆசைகளை குழந்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளப் பார்க்கிறோம். மூன்று வருட குழந்தையைக் கூட டொக்டராக பார்க்கிறோம். இன்ஜினியராகப் பார்க்கிறோம். அது ஒரு தனிக் கனவாக பார்க்கப்படுவதே இல்லை.
ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டும், போட்டியெனச் சொல்லி சிலரை உயர்த்தியும் சிலரை தாழ்த்தியும் விடுகிற மதிப்பெண்களுக்குத் தெரியுமா திறமைகள் வித்தியாசமானவை என்றும் பெறுமதியானவை என்றும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, குரொயனகி, தெத்சுக்கொவின் “தொத்தொ சங் : படிப்பினை தரும் பாடசாலை”, ஆயிஷா இரா.நடராஜனின் “இது யாருடைய வகுப்பறை?” ஆகிய இரு நூல்களையும் மீட்டிய உணர்வில் இப்பதிவு.
குழந்தைகளைப் புரிந்து கொள்ளத் தெரியாத அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்குமான படம் பசங்க-2.
31.12.2015
இஸ்பஹான் சாப்தீன்
www.isbahan.com