2004 டிசம்பர் 26 Tsunami அனுபவப் பகிர்வு 11 வருடங்களின் பின்…
1 min readஎன் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைத் தந்த நாள். ஞாபகப்படுத்தவே விருப்பமில்லாத நாள். கண்ணீர் மட்டுமே எஞ்சியிருந்த நாள். 2004 டிசம்பர் 26. (Unforgettable experience)
காலி நகர் சுனாமியால் மூடுண்ட தருணம்….
எங்கள் ஊர், கட்டுகொடை. சுமார் 527 பேர் ஷஹீதான சிறு கிராமம். பல கோடி சொத்துக்களை இழந்த கிராமம். ஊர் சகோதரர்கள், இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்களை மீட்டெடுக்கும் போது….
இது எங்கள் பள்ளிவாசல்,
இத்தாலி நாட்டின் அனுசரனையில் கிடைத்த தற்காலிக கூடாரங்களில் சுமார் 1000கு மேற்பட்ட கூடாரங்களை என் கரங்களால் நிர்மாணிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதை நிர்மாணிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கும் எனது நண்பர்களுக்கும் கிடைத்த ஆறுதல் இன்றளவும் எதிலும் கிடைக்கவில்லை. இப்படத்தில் உள்ள கூடாரம் நானும் எனது நண்பர்களும் இணைந்து நிர்மாணித்த 03வதும் 04வதும் கூடாரம். இதனை நிர்மாணிக்க சுமார் இரண்டு மணிநேரம் சென்றது. இத்தாலிக்காரன் ‘Prontho’ என முகமன் கூறி கூடாரத்தை தந்தான். எப்படி நிர்மாணிப்பது என்று தெரியாமல் தடுமாறும் போது ஒரு catalog கிடைத்தது. (அந்த catalog ஐ இன்று வரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.) அதனை அலசி ஆராய்ந்து பார்த்துப் பார்த்து எனது வீட்டு முன் முதலாவது கூடாரத்தை நண்பர்கள் சகிதம் நிர்மாணித்து முடித்தோம். இதை அவதானித்த இத்தாலிக்காரன் மொத்த கூடாரங்களையும் நிர்மாணிக்கும் பணியை எங்களிடமே ஒப்படைத்துவிட்டான். அதிலிருந்து தொடங்கியது பயணம். கடைசியாக ரஜ்கம மைதானத்தில் நிர்மாணிக்கும் போது ஒவ்வொரு கூடாரங்களையும் 15 நிமிடங்களில் செய்து முடித்தோம். உனவடுனை தொடக்கம் ரஜ்கம வரை நிர்மாணித்த கூடாரங்களில் மக்கள் வந்து குடியேறும் போது நாமே புது வீடு கட்டிக் கொடுப்பது போன்ற உணர்வு கிடைத்தது. நண்பர்கள்