“குற்றம் கடிதல்”
“குற்றம் கடிதல்” ஒரு ஆசிரியர் செய்யும் சிறு தவறால் ஏற்படும் விளைவுகள் குறித்து பேசும் திரைக்கதை.
1.மாணவர்களை தண்டித்தல்.
2.பாலியல் கல்வி பற்றிய பிரக்ஞை.
4.ஊடகங்களின் ஆதிக்கம்.
ஆகிய 3 மைய விடயங்களைப் பற்றிப் பேசுகிறது படம். மிக இயல்பான கதாபாத்திரங்கள். விறுவிறுப்பான கதை நகர்வு. கெமராக் கோணங்களில் கட்சிதம். அர்த்தமான பாடல்கள் என ஒவ்வொன்றையும் தனித் தனியாக அலசலாம்.
பல விருதுகளைப் பெற்றுள்ள இப் படம் ஒவ்வொரு ஆசிரியரும் பார்க்க வேண்டிய ஒன்று. இப்படம் திருக்குறளின் 44வது அதிகாரத்தை நிச்சயம் ஞாபகம் செய்யும்.