காக்காமுட்டை
1 min read‘காக்காமுட்டை‘ பிஸ்ஸா சாப்பிட அலையும் இரு சிறுவர்களின் கதை. தம் குப்பத்துப் பிரதேசத்தில் புதிதாக ஒரு பிஸ்ஸா கடை திறக்கப்படுகிறது.
அதில் பிஸ்ஸா சாப்பிட இரு சிறாா்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்காக சிறுவர்கள் கடுமையாக கஷ்டப்படுகிறார்கள். எப்படியோ, ராஜ மரியாதையுடன் இருவருக்கும் பிஸ்ஸா சாப்பிடக் கிடைக்கிறது.
இறுதியில், ‘இதவிட நம்ம ஆய சுட்ட தோச நல்லா இருந்திச்சு’ என்கிற இருவரது ஞான வார்த்தைகளோடும் படம் முடிகிறது.
ஒரு நிகழ்வை வைத்து ஊடகமும் அரசியலும் எப்படி நடந்து கொள்கின்றன என்பது பற்றி, பாதையோரச் சிறுவர்களின் (Street Child) சுயமரியாதை பற்றி, அவர்களது, பணம் சம்பாதிக்கும் திறமைகள் பற்றி, சேரி வாழ்க்கையின் அவலம் பற்றி பேசும் இடங்களில் பல செய்திகளை நமக்குச் சொல்லிச் செல்கிறது இப்படம். பல விருதுகள் கிடைத்திருக்கின்றன.