இத்ரீஸ் ஸேர் எனும் பல்லாளுமை.
சந்திக்க எதிர்பார்த்த மனிதர்களை எதிர்பார்க்காமல் சந்திக்கக் கிடைக்கிறபோது அதில் கிடைக்கும் சந்தோசம் அலாதியானது.
என்னைப் போல் பல மனிதர்களின் ஆளுமைகளில் தாக்கம் செலுத்திய, எமது சிந்தனைத் தளங்களில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவர் இத்ரீஸ் ஸேர் எனும் பல்லாளுமை.
நேற்று அவரைச் சந்திக்க அவரது வீ்டு சென்று நானும் நண்பர்களும் இரண்டு மணி நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம்.
அவரது ஊரில் இருந்து பிரியாவிடை பெற்று வர தயாராகிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இரவு 10.15 அளவில் அவரே எங்களைத் தேடி நாம் தங்கியிருந்த இடத்திற்கு வந்திருந்தார்.
அந்த எதிர்பாராத சந்திப்பின் சேமநல விசாரிப்புக்களுக்குப் பின் இலக்கிய உலகில் சம கால நகர்வுகள் பற்றியும் கிட்டிய அண்மையில் அவர் சந்தித்த மனிதர்கள் பற்றியும் சுவாரசியமான பல தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
யா அல்லாஹ்! சீரிய சிந்தனையையும் தேக ஆரோக்கியத்தையும் வாழ்வில் பறக்கத்தையும் வழங்கியருள்வாயாக!