இது ஜும்ஆ குத்பாவின் ஹுருமத்தைபாதித்திருக்குமா?
அவர் வேலையில் அழகான ஒரு டாக்டர், திருமணம் முடிப்பதற்கு பெண் தேடிக் கொண்டிருந்தார்.
‘திரிஷா’ மாதிரி பெண்ணை திருமணம் முடிக்க வேண்டும் என்பதே அவரது ஆசை. பல இடங்களிலும் தேடினார்.
செல்லுமிடங்களில் எல்லாம், வைத்திருக்கும் வாழைப்பழம், இத்தியாதிகளை சாப்பிட்டு விட்டு, இப் பெண் ‘திரிஷா’ மாதிரி இல்லை எனச் சொல்லி வந்துவிடுவார். இப்படியாக 27 இடங்களுக்கு போய் வந்தாயிற்று. ‘திரிஷா’ மாதிரி பெண் கிடைக்கவில்லை.
28 ஆவது முறை அவர் எதிர்பார்த்த ‘திரிஷா’ மாதிரி அங்க தோற்றமுடைய பெண் கிடைத்தாள். உடனே ஓகே சொல்லிவிட்டார்.
ஆனால், அப் பெண்ணோ, ‘எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை’ என்று மறுத்துவிட்டாள்.
‘நான் ஒரு பேமஸ் டாக்டர், நிறைய சம்பாதிக்கிறேன் அப்படி இருந்தும் ஏன் என்னைப் பிடிக்கவில்லை’ பதிலுக்கு கேட்டு வைத்தார் டாக்டர்.
அதற்கு, “நான் ‘சூர்யா’ மாதிரி ஒரு மாப்பிள்ளை தேடுகிறேன். நீங்களோ ‘வடிவேலு’ போல் இருக்கிறீர்கள்” எனப் பதில் சொன்னாலாம அந்த திரிஷா பெண்.
அந்த நேரத்தில் டாக்டரின் நிலமை எப்படி இருந்திருக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும்…
இது இன்றைய ஜும்ஆ குத்பாவில் இமாம் மொழிந்த ஒரு சம்பவம்.
கேள்வி: இந்தச் சம்பவத்தை மிம்பரில் இருந்து கொண்டு இமாம் மொழிந்தது ஜும்ஆ குத்பாவின் ஹுருமத்தை (புனிதத்தை, கண்ணியத்தை எப்படி வேண்டுமானாலும் பெயர்த்துக் கொள்ளுங்கள்) பாதித்திருக்குமா?
இல்லையா?