நேர்காணல்: முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு பின்னால் சர்வதேச சதி உள்ளது -பத்தேகம சமித ஹிமி
1 min read- நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதால் மக்கள் பெறப்போகும் நன்மைகள் என்ன?
இதன் மூலம், மக்களுக்கு அப்பால், ஒரு ஜனாநாயக சூழல், ஒரு ஜனாநாயக ஆட்சி முறை உருவாகும் என்பதே எனது நம்பிக்கை.
தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் செய்ததைப் பாருங்கள்.
நாங்கள் இதுவரை அறிந்து வைத்திருக்கின்ற பாராளுமன்ற முறைப்படி கூடுதல் வாக்குகளைப் பெற்ற கட்சியின் தலைவரே பிரதமராக வருவார். ஆனால், இங்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பிரேரித்தவர், பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இது மக்களின் நிலைப்பாட்டுக்கு புரம்பான ஒரு விடயம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால் மக்களின் நிலைப்பாடு மாற்றப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒரு தவறு இது. ஜனநாகத்துக்குள் மக்களின் நிலைப்பாடு, மக்களின் அபிலாஷைகள், மக்களுக்கு பதில் அளிக்கின்ற பிரதான விடயம் பாதுகாக்கப்படுகின்ற வகையிலான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இருப்பதில் தவறில்லை. ஆனால், அதில் இருக்கும் நச்சுக்கள் தான் களையப்பட வேண்டும். மக்களின் கருத்துக்களுக்கு தடையாக இருக்கும் முட்டுக்கட்டைகள் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. நீக்குவதால் இப்போதுள்ள அதிகாரப்பகிர்வை நிலைநாட்டுவது எப்படி என்பது ஒருகேள்வி. சில வேளை, அதிகாரம், பாதுகாப்பு போன்ற பிரதான துறைகளுக்கு பொறுப்பாக ஜனாதிபதி ஒருவர் இருப்பதில் தவறில்லை. இருந்தாலும் நாம் சொல்கின்ற அந்த அதிகாரம் இன்னும் பல பிரச்சினைகளை கொண்டு வரும். இதன் மூலம் நினைத்தவுடன் நினைத்த நேரம் நினைத்தவரை நியமிக்கின்ற தவறுகளும் இடம்பெறும்.
நாங்கள் பார்த்தோமே, நீதியரசருக்கு நடந்ததை, அதற்கு நாம் சந்தோசப்படவில்லையே, நாங்கள் கூட்டணியில் இருந்ததால். எங்களால் பகிரங்கமாக எதிர்க்க முடியவில்லை. மைத்ரியா, மகிந்தயா என்கிற தனிப்பட்ட பிரச்சினை அல்ல இது. இங்கிருக்கின்ற ஜனாதிபதிப் பதவி என்பது அந்தளவு அதிகார செல்வாக்கு கொண்டது. பாரதூரம் அதிகம். அதிகாரம் குவிந்துள்ள இடம் மக்களால் சகித்துக்கொள்ள முடியாதது. அதனால் இது மாற்றப்பட வேண்டும் என நினைக்கிறேன். அதை முற்றாக நீக்குவதா இல்லையா என்பதை யாப்பு சீர்திருத்த குழு ஒன்றை நியமித்து முடிவெடுக்க வேண்டும். ஆனால் பிரதானமான நச்சுக்கள் உள்ள பகுதி அகற்றப்பட வேண்டும் என்பது முக்கியமாக எனது நிலைப்பாடு.
- ஜனாதிபதி தேர்தல்களில் முஸ்லிம், தமிழ் சிறுபான்மை மக்கள் தமது வாக்குகளை கடந்த தேர்தலிலும் இம்முறை தேர்தலிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அது மகிந்தயாக இருக்கலாம், மைத்ரியாக இருக்கலாம் இருவரும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள். மைத்ரியின் வெற்றிக்கு சிறுபான்மையினரே பங்களித்துள்ளனர் என இனவாத கருத்துக்களை ஏன் பரப்புகிறார்கள்? நாட்டு மக்கள், நாட்டுநலனுக்காக வாக்களித்து இருக்கிறார்கள் என்று ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது?
முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்திய விடயங்கள் அனைத்துக்கும் முழுமையாக ராஜபக்சாக்கள் பொறுப்பேற்க வேண்டும். பொதுபல சேனாவை அவர்கள் தண்டிக்கவில்லை. பொதுபலசேனாவும் அஹமதும் எல்லோரும் ஒரே சட்டத்தால் தானே நிர்வகிக்கப்படுகிறோம். பொதுபல சேனாவுக்கு அதற்க மெலால் செல்லமுடியாதே. நாம் இவற்றை ராஜபக்ச உயர்பீடங்களுக்குப் போய் அவர்களுக்கு தண்டனை வழங்குமாறு மூன்று முறை சென்னோம். இறுதியில் பேருவளை நிகழ்வை நிறுத்த முயற்சித்தோம். பேருவளை சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு கூறினோம். அது நடக்கவில்லை.
களுத்தரை முஸ்லிம்கள் என்பவர்கள் என்றென்றும் வரலாற்று நெடுகிலும் சிங்கள அரசகாலம் தொட்டு சிங்களவர்களுடனே வாழ்ந்து, சிங்களவர்களுடனேயே வியாபாரக் கொடுக்கல் வாங்கல் செய்து, சிங்களவர்களுடனேயே உணவருந்தியவர்கள். முஸ்லிம்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரித்துப்பார்க்க முடியாது.
தந்தைகள் மட்டுமே இங்கு வந்தார்கள். தாய்மார்கள் இங்கே இருந்தவர்கள் என்றும், எமது இரத்தம் ஒன்றென்றும் வரலாற்றில் ஒரு கதை இருக்கின்றது, எங்களிடம் இருப்பது இரத்த உறவு.
பிரபாகரனின் போராட்ட காலத்தில் முஸ்லிம் சமூகத்தினர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் பக்கம் செல்லவில்லையே, அவர்களை L.T.TE உடன் இணைந்து போராட அழைத்ததாகவும் தாம் மறுத்ததாகவும் நாம் போய் கதைத்த போது வவுனியாவில் சில முஸ்லிம் இளைஞர்கள கூறினார்கள். Tamil speaking people என்கிற சுலோகத்தை எடுத்ததும் அதனால் தானே. அப்படியும் முஸ்லிம்கள் செல்லவில்லையே. ஒருவர் இருவர் சென்றிருக்கலாம். அப்படிப்பார்த்தால் சங்களவர்களும் தான் சென்றார்கள். இப்படியானவர்கள முஸ்லிம்கள்.
முஸ்லிம் சமூகத்தினர் இந்த நாட்டிலே வாழும் வியாபார சமூகம். என்னைப் பொருத்தவரை அவர்களை கோபித்துக் கொள்வதற்கு எந்தக்காரணமும் இல்லை. அடுத்த விடயம் முஸ்லிம்கள் எமக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று எப்போதுமே கேட்டதில்லை.
திடீரென்று இப்படியான முஸ்லிம் எதிர்ப்பு நிலையொன்று வர முடியாது. நான் நினைக்கிறேன் எனது தனிப்பட்ட கருத்துப்படி இதற்குப்பின்னால் சர்வதேச சதி ஒன்றுள்ளது. மற்றவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் சர்வதேச சதியல்ல நான் சொல்வது. யூதர்கள். உலகம் முழுவதும் ஸியோனிஸம் என்பது இயங்குகிறது. அவர்கள் தான் இவற்றை ஊடுறுவச் செய்கிறார்கள். மத்திய கிழக்கை குழப்பியவர்களும் இவர்களே. அவர்களின் ஒரு பகுதியினர்தான் இவர்கள். அவர்களது மிஷன்தான் இது. இல்லாது போனால் திடீரென்று பிக்கு கூட்டமொன்றுக்கு பைத்தியம் பிடித்தது எப்படி? வரலாற்று ரீதியான எந்தக் காரணமும் இல்லையே.
காத்தாங்குடி பள்ளிக்கு சென்று பார்த்தால் விளங்கும். 24 மணி நேரத்துக்குள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அவர்கள். யுத்தத்தினால் கஷ்டங்களை சந்தித்த மக்கள் அவர்கள். நகரத்தில் உள்ள சிலர் நன்றாக வாழ்வதாக இருக்கலாம். கிராமப்புரங்களுக்கு போய் பார்த்தால் அவர்களிலும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பது புரியும். கடும் பொய்களை தானே இவர்கள் சொல்கிறார்கள்.
சனத்தொகை அதிகரிக்கிறது என்றும் சொன்னார்கள். ஏன் அவற்றுக்கு ராஜபக்ஷாக்கள் இடம் கொடுத்தார்கள்? இவற்றை ஏற்க முடியாது என ராஜபக்ச ஜனாதிபதியிடம் நான் கூறினேன். அவர்களது தம்பிகளுக்கும் சொன்னேன். கோட்டாபையை மாத்திரம் தான் சந்திக்கவில்லை. இவற்றின் விளைவைத்தான் அவர்கள கண்டுகொண்டார்கள். பௌத்தனென்ற வகையில் பௌத்தத்தில் ‘தித்த தர்ம வேதினிய அகுஸல கர்மய’ என்று சொல்வார்கள். தாம் செய்த பாவங்களுக்கு பார்த்திருக்கும் போதே பலனை அனுபவிப்பர்’ எனவே அதை அனுபவிக்கிறார்கள்.
அடுத்து தமிழ் மக்கள், இப்போதுள்ள TNA வடக்கு ஆளுனரை மாற்றித் தருமாறு கேட்டதாக அறிகிறேன். ராணுவ ஆளுனர் அல்லாமல் சிவில் ஆளுனரை தருமாறும், தத்தால் 10 லட்சம் வாக்குகளை பெற்றுத்தருவதாகவும் கூறியிருக்கிறார்கள். ஆனால, ஓய்வு பெற இருந்தவருக்கு சேவை நீடிப்பு செய்து அப்படியே வைத்திருக்கிறார்கள். அவர்களது கன்னத்துக்கு அறைந்தது போன்ற ஒரு செயலையே இவர்கள் செய்திருக்கிறார்கள்.
அடுத்து கத்தோலிக்க மக்கள், அவர்கள் ஏன் கோபித்தார்கள்? பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நோனிஸின் கன்னத்தில் அறைந்த சம்பவம். அது சும்மா அறையாது பறங்கிய கத்தோலிக்கன் என்று சொல்லி அறைந்திருக்கிறார்கள். நான் உங்களுக்கு அறைந்தால் தனிப்பட்ட பிரச்சினையாக போயிருக்கும். ஆனால் முஸ்லிம் என சொல்லி அறைந்தால் அதன் பாதிப்பு அதிகம். அப்படித்தான் அறைந்துள்ளனர். இதனால் கிறிஸ்தவர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டனர்.
இப்படி பிரதான மூன்று சமூகத்தினதும் அதிருப்தியை தேவையில்லாமல் சம்பாதித்துக் கொண்டார்கள். இதற்கு அந்த சமூகத்தினர் மீது குற்றம் சாட்ட முடியாது. இப்படித்தான் முஸ்லிம் சமூகத்தின் வாக்கையும் இழந்தார்கள். எங்களுக்கான வாக்குகள் அவை. எனவே அந்தக்கருத்து முற்றிலும் பிழையானது. எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் இந்த நாட்டு மக்கள், நாட்டு மக்கள் என்ற வகையில் நாட்டுக்காக வாக்கை பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர்களது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவற்றுக்குக் கட்டுப்பட வேண்டுமே தவிர, அதனை சிறுபான்மை வாக்குகள் எனக் கூறி தீவிரவாத, இனவாத சாயம் பூச முனைவதை என்னால் ஏற்க முடியாது.
- TNA போன்ற சிறுபான்மை கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளைக் கூட இந்த நாட்டு மக்களின் தேவை எனப் பார்க்காது இனவாத அடிப்படையில் பார்க்கிறார்களே?
இப்படித்தான், இந்த ஹலால் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், இந்த கருத்தை உருவாக்கி மாடுகளுக்கு கொடுத்தது சம்பிக ரணவக, கிடைத்ததும் மாடுகள் கொம்புகளால் குத்திக குத்திச் சென்றன. இந்தக் குற்றச்சாட்டை சம்பிகயால் மறுக்க முடியாது. ரதன தேரர் அந்தளவு தூரம் செல்லவில்லை. மற்ற விடயம், பேருவளைக்குச் சென்றது. புத்தர் படங்கள் ஒட்டப்பட்ட வீடுகளுக்குச் சென்று கதைத்தனர். பார்ப்பவர்களுக்கு கதைப்பவர் சிங்கள பௌத்தர் என்ற உணர்வை ஏற்படுத்த இப்படிச் செய்தனர். ஒரு கெபினட் அமைச்சர் அப்படி செய்வது சரியல்ல. அமைச்சர் எப்படிப் போனாலும் சாதாரண ஒருவர் கூட அப்படி செய்யத் தேவையில்லை.
- யுத்த வெற்றியின் போது முஸ்லிம் இளைஞர்கள் பாற்சோறு சமைத்து தமது சந்தோசத்தை வெளிப்படுத்தினார்கள். தற்போது மைத்ரிபால சிரிசேன ஜனாதிபதியாக மாறியதும் அதே போல் தமது வெற்றியை கொண்டாடினார்கள். முஸலிம் இளைஞர்கள் நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
சிங்கள, தமிழ், முஸ்லிம், கிஸ்றிதவர் அனைவரும் சமாதானமாக வாழ வேண்டும். யாரும் சண்டை பிடிக்கத் தேவையில்லை. அடிப்படை வாதிகள் எல்லா சமூகத்திலும் இருக்கின்றனர். நாங்கள் நன்றாக சாப்பிட்டு, எங்களது குழந்தைகளோடு நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான் பொது மக்களின் கோரிக்கை. எடுத்துக்காட்டாக, நான் ஒரு இடத்துக்குப் போனால், தொண்ணூறு வீதமான பௌத்த மக்கள் கேட்கிற கேள்வி நீங்கள் பொதுபல சேனா பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பதுதான். நான் எனது நிலைப்பாட்டை சொன்னதும் நாமும் அதே கருத்தில் தான் இருக்கிறோம் என்று சொல்கின்றனர். அதற்குள்ளும், ‘அப்படித்தான் செய்ய வேண்டும்’. ‘பயங்காடடத்தான் வேண்டும்’ என்று சொல்பவர்களும் ஓரிருவர் இருக்கத்தான் செய்வர்.
அப்படி பயங்காட்டப் போய் அதை விட பாரதூரமாக நடத்துவிட்டால்? ISIS போன்ற ஒன்று உருவாகிவிட்டால்? கேட்டு வாங்கியது போல் ஆகிவிடும். யாரும் யாருக்கும் பயப்படத்தேவையில்லை. இது ஒழுக்கமுள்ள சமூகங்கள் வாழும் நாடு. நல்லதொரு உதாரணம் சொல்கிறேன். ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் பாதுகாப்பு செயளாலர் BMICH க்கு வருமாறு பிக்குகளை அழைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. நாங்கள் அங்கே சென்றபோது டிலந்த (பொது பல சேனா) பேச ஆரம்பித்தான். பேசத்தொடங்கி ஐந்து நிமிடத்தில் நான் எழுந்து எங்களை வரச்சொன்னது உங்கள் உரையை கேட்கவா என்று கேட்டேன். 600 பேர் அளவில் எழுந்துவிட்டனர். எங்களை வரச்சொன்னது பாதுகாப்புச் செயலாளர். அவரை வரச்சொல்லுங்கள் என்றனர்.
மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தமைக்கான முதல் உரிமையை கோரவேண்டியது பொதுபலசேனாதான்.
(மிகுதி அடுத்த இதழில்)
நேர்காணல்:
இஸ்பஹான் சாப்தீன் (www.isbahan.com)
பீ.எம் முஜீபுர் ரஹ்மான்
படங்கள்:
மில்பர் ஸாலிஹ்
மீளபார்வை இதழ்-311 பக்கம்-10
30.01.2015