தாஜ்மஹால் உனக்குரியது.
1 min readஅவள்,
பக்கத்தில் இருந்தால்…
நீ அன்பு செய்வாய்.
அவள்,
தூரத்தில் இருந்தால் மட்டுமே
காதல் செய்வாய்.
காதல்,
அற்புதமான ஓா் உணர்வு,
எப்போது தொலைக்கிறோமோ
அப்போது உணர்கிறோம்.
மனைவி மறைந்ததும்
சாஜஹான் உணர்ந்தான்
தாஜ்மஹால் பிறந்தது.
தாஜ்மஹால்,
சாஜஹான் கட்டியது.
மும்தாஜுக்காய் கட்டியது.
சொல்லுங்கள்!
தாஜ்மஹால்
சாஜஹானுக்கு உரியதா?
மும்தாஜுக்கு உரியதா?
அது காதலின் சின்னம்
என்கிறது உலகம்.
அப்படியென்றால்,
அது உனக்குரியது,
உன் காதலுக்குரியது,
உனக்கும் உரிமை உண்டு.
நீ “மனைவியை” காதலித்தால்…!
-இஸ்பஹான் சாப்தீன்-
2015.01.17