திருமணமும் தோசமும்
திருமணம் முடிப்பதும்
தோசம் பிடிப்பதும்
ஒன்றேயென்றான்
தோழன்!
தோசம் பிடிப்பதும்
ஒன்றேயென்றான்
தோழன்!
நானோ,
போலிச்சாமியார் போல்,
நீ சந்நியாசியாய்
இருக்கப்போகிறாயா?
எனக்கேட்டேன்.
அவனோ,
விளம்பர சுவரொட்டியை
உற்று உற்று பார்த்துவிட்டு,
இதுவும் நன்றன்று.
அதுவும் நன்றன்றே
என்றான்.
நானோ,
இந்நிர்வாண உலகில்
சந்நியாசமே பெரும் தோசம்.
தோசமும் நீங்கலாம்,
சந்நியாசியாயும் இருக்கலாம்.
திருமணம் முடி என்றேன்.
அதெப்படி என்றான்.
‘சந்நியாசம்’ என்பதன்
முதல் இரு எழுத்தையும்
‘தோசம்’ என்பதன்
முன் வை என்றேன்.
வைத்தான்!
சந்+தோசம்.
நண்பனுக்கு
நாளை திருமணம்.
சந்தோசம்!
இஸ்பஹான் சாப்தீன்
2014|04|22