நன்றிக்காய்…!
கவிக்க
விதை தந்தோருக்கும்,
விதைக்க
நிலம் தந்தோருக்கும்,
புதைக்க
ஆயுதம் தந்தோருக்கும்,
கிளைக்க
உரம் தந்தோருக்கும்,
செழிக்க
நீா் தந்தோருக்கும்,
துளிா்த்த போது
ஊக்கியோா்க்கும்
செடியான போது
தடையானோா்க்கும்
விருட்சமான பொழுதில்
நிழல் காய்வோா்க்கும்
காணிக்கையாய்..
கனி சுமந்து பணிகிறேன்.
(வெளிவர இருக்கும் என் கவிதை நூலுக்காக எழுதியது)
இஸ்பஹான் சாப்தீன்
2014|03|21