பேசித்தீர்ப்போம் வா!
நான் பேசாதிருக்கயில்
கோபித்துக் கொள்கிறாய்…
நான் பேசுகயில்
கோபப்படுத்துகிறாய்…
என்ன பெண் நீ?
இருப்பினும்,
எல்லாம் சில கணம்தான்..
மீண்டும்
கோபம் உடைத்து,
நீ பேசினாலோ,
நான் பேசினாலோ
கோபம் மறக்கிறோம்…
இது பிடித்திருக்கிறது,
பேசிக் கோபப்பட்டு
பேசிப் புரிவதால்.
பேசாது
பிரிவு வரின்
பேசித்தீர்ப்போம் வா!
பேசிப் பேசியே..
இஸ்பஹான் சாப்தீன்
2014|03|14