தென்றலே நீ வீசு…
1 min readசெழிப்பான உலகத்தில் -நாம்
சுதந்திரமாய் வாழ வந்தோம்
களிப்புடன்தான் வாழ்ந்தாலும்
சலிப்புகூட இருக்கிறதே..
ஐயறிவு உள்ளதுவும் -சிறு
கையறிவு உள்ளதுவும் அன்பாயிருக்க
ஆறறிவு உள்ள இவன் -ஏனோ
இல் அறிவுடன் கிடக்கின்றான்..?
பெறுமை எனும் புகையும்
பொறாமை எனும் வகையும்
பேராசை எனும் இருளும்
எருமைக்கும் இல்லை.
வீசுகிறது சூறாவளி போல் ரவை,
புயலாய் தொடர்கிறது யுத்தம்,
காற்றாய் பறக்கிறது உயிர் -ஏனோ
தென்றல் வீசாதிருக்கிறது?
பாய்கிறது வெள்ளமாய் உதிரம்,
ஓய்கிறதே இல்லை இந்த யுத்தம்,
அகதிகளே இதன் முடிவு.
அநாதைகளே இதன் விளைவு.
சரிந்து வீழ்ந்த மரம் போல்
உள்ளம் சரிந்து கிடக்கிறது.
உணர்விழந்து கிடக்கிறது.
உயிர் துறந்து கிடக்கிறது.
நீ வீசாத போது அழிவு
நீ வீசு! வரும் தெளிவு
வீரிடும் எங்கும் பொழிவு
வீசு நீ சமாதான தென்றலே..!
(இது என் கன்னிக் கவிதை. என் கவிப் பயணத்திற்கு அன்று நான் வைத்த முதல் தடம். கா/உஸ்வதுன் ஹஸனா மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் படிக்கும் போது பாடசாலை மட்டத்திலான ஓர் போட்டிக்காக எழுதியது. புத்தக ராக்கையில் பழைய புத்தகங்களுக்கு மத்தியில் இருந்து நேற்று தற்செயலாய் என் கண்ணில் சிக்கியது.)