அதற்கு “ஆசூரா புடின்” என்று பெயர்…
இன்று(17) கொழும்பு இஸ்லாமிய கற்கைகளுக்கான நிலையத்தில் இஸ்லாத்திற்கு மீண்டும் திரும்பிய புதிய சகோதர, சகோதரிகளுக்கு முஹர்ரம், ஆசூரா, ஹிஜ்ரத் குறித்த விளக்கங்களை வழங்குவதோடு வாழ்கையின் புதிய நகர்வுக்கான சிந்தனையை ஏற்படுத்தும் நோக்கோனடு ஏற்பாடு செய்திருந்த ஒரு அமர்வு
இந் நகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜாவிட் மனவ்வர், அஷ்ஷெய்க் ரிம்ஸி, ஹலீம்தீன் மௌலவி ஆகியோர் கலந்துகொண்டனர். சுமார் 100 பேர் அளவில் பங்குபற்றி பயன்பெற்றனர். நிகழ்ச்சியின் இடையே “ஆசூரா புடின்” வழங்கப்பட்டது. துருக்கி நாட்டின் இலங்கை தூதுவராலய சகோதரர்கள் அதனை பகிர்ந்தளித்தனர். இந்த “ஆசூர புடின்” எனும் உணவு வகையை நான் இன்றுதான் முதற்தடவையாக சாப்பிட்டேன். இந்த உணவு வகைக்கு விசேட வரலாற்றுப் பின்னணியும் மரியாதையும் இருப்பதாக அறிந்தது இன்னும் விசேடமாக இருந்தது.