December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

மாணவிகளுக்கான இலவச MoJo பயிற்சிநெறி

1 min read

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான இலவச MoJo பயிற்சிநெறி

பஹன மீடியா அகடமி கஹட்டோவிட்ட, உடுகொட மற்றும் திஹாரிய பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளுக்காக நடத்தப்படும் செல்பேசி ஊடகவியல் (MOJO) தொடர்பான கருத்தரங்கும் செயல்முறைப் பயிற்சியும் கஹட்டோவிட்ட, கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம். இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் 0770732306 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தம்மைப் பதிவு செய்துகொள்ளலாம்.

முற்றிலம் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளரும், ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் ‘நியூஸ்நவ்’ ஊடகத்தின் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் ஆகியோர் வருகை தரவுள்ளனர்.

சான்றிதழ் வழங்கும் இறுதி அமர்வில் பஹன மீடியா அகடமியின் முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.