Responsible Digital Citizen எனும் தொனிப்பொருளில் நடாத்திய செயலமர்வு
1 min readதோப்பூர் அல்ஹமரா மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பொறுப்புள்ள எண்மப் பிரஜை (Responsible Digital Citizen) எனும் தொனிப்பொருளில் ஒரு விழிப்புணர்வு செயலமர்வு அதிபர் எஸ்.எம். ரஹீம் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை ஊடகக் கழக பொறுப்பாசிரியர் எம்.யூ.எம்.ரமீஸ் மற்றும் ஊடகவியலாளர் முஹம்மது முகைதீன் நவ்பீக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கங்கதலாவ ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயலமர்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலி முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளர் இஸ்பஹான் சாப்தீன் வளவாளராகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.