ஊடக செயலமர்வில் Mojo அறிமுகம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 75வது ஊடகச் செயலமர்வு ’21 ஆம் நுாற்றாண்டில் இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள்’ எனும் தலைப்பில் நேற்று கொழும்பு 12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லுாரியின் அதிபர் எம்.எச்.மும்தாஜ் பேகம் ஆகியோர்கள் தலைமையில் நடைபெற்ற இவ் ஊடக செயலமர்வில் ‘செல்பேசி ஊடகவியல்’ தொடர்பில் ஓர் அறிமுகம் வழங்கக் கிடைத்தது.