வசனயட பரிசாம்த…
நாம ஒன்னு சொல்லியிருப்போம். அதுவும் நாலுபேருக்காக அல்ல நாலாயிரம் பேருக்காக சொல்லியிருப்போம். அதுவும் நல்லதா தான் சொல்லியிருப்போம்.
தொப்பிய தானே வாங்கி போட்டுட்டு, அது தனக்கு தந்த வலியா மாத்திக்கிட்டு, தனக்கு வலிக்காத மாதிரியும் இது உங்களுக்கு வலிக்கலயா என்டு சும்மா இருக்கிறவங்களுக்கெல்லாம் தொப்பிய பலவந்தமா போட வெச்சி குடுப்பாய்ங்க பாரு ஒரு பில்டப்பு. ஆள் சேக்குராய்ங்களா இல்ல தன் பிழைய மறச்சி ஆசுவாசப்படுத்திக்கிறாய்ங்களா என்டு தெரியல.
சொன்னது ஒன்னா இருக்கும். ஆனா, “சொல்லவந்தது இதுதான்” என்டு ஒரு விளக்கம். “இப்பிடியும் இத எடுக்கலாம்” என்டு ஒரு விளக்கம். “இத நெனச்சி தான் சொல்லியிருக்கலாம்” என்டு ஒரு விளக்கம். “இதால இப்பிடி நடக்கலாம்” என்டு ஒரு விளக்கம். “இது ஒங்களுக்கு தான் சொல்லியிருக்கு” என்டு ஒரு விளக்கம். இப்பிடி டிசைன் டிசைனா அர்த்தம் கொடுத்து சொன்ன நல்லதையெல்லாம் விட்டுட்டு குடுப்பாய்ங்க அந்தமாதிரி விளக்கம்.
“ஊக்கப்படுத்த முன்வர்ரவங்கள ஊனப்படுத்துரமாம்” சபாஹ்.. பாவம் முல்லாக்களும்… பின்தொடரும் குல்லாக்களும்…
பாரவால்ல.. நம்மளுக்கு பப்லிசிட்டி ஃப்ரீ. நம்மள தெரிஞ்சவங்களுக்கு நம்ம யாரென்று தெரியும். நாளு பேரு சொல்றத வெச்சி நம்பாம, கேக்குரவங்களும் உண்மைய தேடி அறிஞ்ஞா புரிஞ்சுக்குவாங்க.. எதச் சொன்னோம்.. ஏன் சொன்னோம்னு.. இப்ப என்ன தேட வழியில்லாமலா?
சிங்களத்துல சொல்வாங்க “வசனயட பரிசாம்த அர்த்தயென்” என்டு.. சொல்றத அப்பிடியே அர்த்தமா எடுக்காட்டி சிலருக்கு இந்த கஷ்டம் வருவத தவிர்க்க ஏலாது. தானா ஒன்ட நெனச்சி மத்தவங்களேம் கொழப்பி.. என்ன நான் சொல்றது?