Mobile Journalism உலமாக்களுக்கு முழுநாள் பயிலமர்வு
1 min readசெல்பேசி ஊடகவியல் ஓர் அறிமுகம் (An Introduction to Mobile Journalism) மற்றும் சமூக ஊடகங்கள் (Social Media) தொடர்பில் முழுநாள் பயிலமர்வொன்றை நடாத்த வாய்ப்புக் கிடைத்தது.
மாவனல்லை, அரனாயக்க, திப்பிட்டிய, வில்பொல ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற இவ்வமர்வில் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40 இற்கும் அதிகமான ஆலிம்கள் கலந்து பயன்பெற்றனர்.
உலமாக்களுக்கான ஊடக வழிகாட்டல் என்ற தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இதனை பஹன மீடியா எகடமி, ஜம்இய்யதுல் உலமா கேகாலைக் கிளை மற்றும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்த ஏற்பாடு செய்திருந்தன.