இஸ்லாமிய கலைக் கண்காட்சி நடுவர் குழுவில்…
1 min readகொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தினால் நான்காவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய கலைக் கண்காட்சி – 2023 வெகு விமர்சையாக நேற்று (25.12.2023) நடைபெற்று முடிந்தது.
கடந்த 23ம் திகதி காலை 9:00 மணியளவில் கொழும்பு அல் ஹிதாயா கல்லூரி வளாகத்தில் ஆரம்பமான இந்த கலைக் கண்காட்சி 03 தினங்களாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 25 அஹதிய்யா பாடசாலைகள் மேற்படி கண்காட்சியில் பங்கேற்றன.
நேற்று 25.12.2023 அதன் இறுதி தினமாக அமைந்து இருந்தது. இரவு 7.00 மணியளவில் இந்நிகழ்வின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
அதில் பிரதம அதிதியாக அஹதிய்யா மத்திய சம்மேளனத்தின் தலைவர் அல் ஹாஜ் எம்.ஆர்.எம்.சரூக் அவர்ளும் சிறப்பு விருந்தினர்களாக அஹதிய்யா மத்திய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் M.F.M. பாஹிம் அவர்களும் , சட்டத்தரணி நுஸ்ரா சரூக் அவர்களும், மத்திய சம்மேளன மூத்த உறுப்பினர் சப்வான் ஏ. அஸீஸ் அவர்களும், கொழும்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலை சம்மேளனத்தின் பரூஸ் ரஹீம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்த பரிசளிப்பு விழாவிற்கு கொழும்பு மாவட்ட அஹதிய்யா சம்மேளனத்தின் தலைவர் அஷ்ரப் ரூமி அவர்களும், செயலாளர் அஷ்ஷெய்க் முஹம்மத் அவர்களும், தனாதிகாரி M.F.M. ரிஸ்வான் அவர்களும் ஏனைய அங்கத்துவர்களும், அஹதிய்யா பாடசாலை அதிபர்களும் , ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதில் முதலாம் இடத்தை வெள்ளம்பிடிய அஹதியதுல் தாருஸ்ஸலாம் அஹதிய்யா பாடசாலையும்,
இரண்டாம் இடத்தை Y.M.M.A ஹல்ஸ்ட்ரொப் அஹதிய்யா பாடசாலையும்,
மூன்றாம் இடத்தை கொழும்பு அல் ஹிதாயா அஹதிய்யா பாடசாலையும் தட்டிச் சென்றன.
மேலும் சிறந்த கண்காட்சிகளை சமர்பித்த 10 அஹதிய்யா பாடசாலைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
மூவர் கொண்ட நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவுகளை நடுவர்கள் சார்பாக இஸ்பஹான் சாப்தீன் அவர்கள் மேடையில் அறிவித்தார்கள்.
பரிசளிப்பு விழாவை கொழும்பு மாவட்ட அஹதிய்யா சம்மேளன உறுப்பினர் சனீர் அஹமட் தொகுத்து வழங்கினார்.
அல்லாஹ்வின் உதவியால் கண்காட்சியும் பரிசளிப்பு விழாவும் மிகவும் சிறப்பாகவும் அமைதியாகவும் நிறைவுற்றது.