December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

வங்கி அட்டைகளை நகலெடுத்து திருடுதல் (ATM Skimming)

1 min read

ATM Skimming என்பது முழுக்க முழுக்க போலி அட்டைகளை தயாரித்து மேற்கொள்ளப்படும் ஒரு திருட்டாகும். இது இரண்டு முறைகளில் மேற்கொள்ளப்படுகின்றது.

(01) ATM Card Copying. அதாவது போலி ATM Card Reader ஐப் பயன்படுத்தி குறித்த ATM Card சம்பந்தமான தகவல்களை பெற்று திருடுதல்

(02) ATM PIN Stealing. அதாவது, Camera மற்றும் Key logger ஐ பயன்படுத்தி ATM Card இற்குரிய குறித்த வாடிக்கையாளர் பதியும் PIN Number ஐ திருடுதல்

அதாவது, திருடர்கள், பல்வேறு கருவிகளை ATM இல் பொருத்தி, வரும் வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்றங்களை முழுவதுமாக பதிவு செய்து கொள்வர். பின்னர் குறித்த ATM Card போன்றே போலி Card ஐ உருவாக்கி, திருடிய PIN Number ஐப் பயன்படுத்தி குறித்த தனிநபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவர். இந்த முறை மூலமே அதிகமான திருட்டுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற ATM திருட்டுக்கள் இந்த வழிமுறைகள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன.

இப்படியான திருட்டுகளில் இருந்து நாம் எப்படி பாதுகாப்பு பெறலாம்.

1. பாதுகாப்பான ATM களை பயன்படுத்துதல்.

2. பணம் பெற ATM இல் பதிவு செய்யும் உங்கள் PIN இலக்கம், யாருக்கும் தெரியாத வகையில் உடம்பால் மறைத்துக்கொள்ளல்.

3. நீங்கள் Card ஐ நுழைவிக்கும் பகுதியோ அல்லது PIN இலக்கம் பதிவு செய்யும் Keyboard டோ வழமைக்கு மாற்றமாக தடிப்பாக இருப்பது போல் சந்தேகம் ஏற்பட்டால் குறித்த மெஷினை பயன்படுத்தாதிருத்தல்.

4. ATM Machine பல உள்ள இடத்தில், குறித்த ஒரே ஒரு Machine ஐ மாத்திரம் சுட்டிக்காட்டி இதனை மாத்திரம் பயன்படுத்துங்கள் என்று போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தால் ஒன்றுக்கு இரண்டு முறை பரிசீளித்துக் கொள்ளுங்கள்.

5. நீங்கள் ATM ஐ பயன்படுத்தும் போது யாரும் சந்தேகமாக நடமாடினால் அவர்களிடம் உதவி கேட்காதீர்கள்.

6. உங்கள் Card விசயத்தில் எப்போதும் கவனமாக இருங்கள். யாருக்கும் வழங்காதீர்கள்.

7. மக்கள் நடமாற்றம் இல்லாத இடங்களில் சந்தேகமான வகையில் தற்காலிக ATM கள் பொருத்தப்பட்டிருந்தால், அவற்றை பயன்படுத்தாதீர்கள்.

8. ATM Card விவரங்களை யாரிடமும் பகிராதீர்கள். குறிப்பாக PIN Number ஐ யாரிடமும் சொல்லாதீர்கள். PIN Number என்றால் personal identification Number என்று பொருள். எனவே அது உங்களுக்கு மாத்திரம் உரியது. உங்களது Number ஐ பாடம் செய்து கொள்ளுங்கள். துண்டுகளில் எழுதி, அட்டையுடன் இணைத்து வைத்துக் கொள்ளாதீர்கள்.

9. அதேபோல், Machine இல் இருந்து Card ஐப் பெற்றுக்கொண்ட பின்னர், பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். வெளியேறும்போது cancel button ஐ ஒரு முறை அழுத்திவிட்டு வெளியேறுங்கள்.

10. நீங்கள் வங்கி அல்லது ATM booth களுக்குள் நுழையும்போது பெறுமதியான ஆபரணங்கள் அணிந்து செல்வதும் பணத்தை பெற்ற பின் கையில் எடுத்துக்கொண்டு வெளியில் வருவதும் குற்றவாளிகளுக்கு உங்களை குறிவைக்க காரணமாக அமைந்துவிடும்.

11. ATM Slip களை ATM ஐச் சூழவுள்ள பகுதிகளில் எறிந்து விடாதீர்கள். சில வங்கிகள் Slip இல் கணக்கு மீதியோடு உங்கள் வங்கிக் கணக்கு இலக்கத்தையும் பதிந்திருக்கும்.

12. ATM PIN Number ஐ எமக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள முடியும். எனவே, ஒரே Number ஐ தொடர்ந்து பயன்படுத்தாமல் மாற்றிக்கொள்ளுங்கள்.

13. பணம் போட்டாலோ எடுத்தாலோ உடன் உங்கள் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும்படியான சேவையை செயற்படுத்திக் கொள்ளுங்கள்.

14. EPOS – Electronic Point of sale, அதாவது கடைகளில் ATM Swipe Machine ஐ பயன்படுத்துவார்களாயின் நன்கு அவதானத்துடன் Card இல் பணம் செலுத்துங்கள். எப்போதும் பொருள் கொள்வனவுக்கென்று குறைந்த தொகையை வைத்திருக்கும் அட்டைகளை பயன்படுத்துங்கள்.

15. நீங்கள் ஒரு கட்டளையை வழங்க அதற்கேற்ப இயந்திரம் இயங்காவிட்டால், அப்படியான நிலையில் தொடர்ந்தும் அந்த இயந்திரத்தை பயன்படுத்தாதீர்கள்

16. சில வங்கிகள் தற்போது 3d secure pin என்ற சேவையை வழங்குகின்றன. உங்கள் Card ஐ செலுத்தியபின் வங்கி உங்களை அடையாளம் கண்டு கொள்ள உங்களுக்கு வழங்கி இருக்கும் மற்ற PIN Number ஐக் குறைக்கும். அதனையும் வழங்கினாலேயே பணப் பரிமாற்றத்திற்கு அனுமதியைத் தரும்.

17. சில வங்கிகள் Chip உள்ளடங்கிய ATM Card களை வழங்குகின்றன. இவை சாதாரண Card ஐ விட பாதுகாப்பானவை. இது EMV Chip Card என்று அழைக்கப்படுகிறது.

18. உங்கள் ATM Card தொலைந்து விட்டால் உடன் வங்கிக்கு அறிவித்துவிடுங்கள். PIN Number இல்லாமலேயே உங்கள் Card மூலம் யாருக்கும் பொருள் வாங்க முடியும்

29. 3ஆம் தரப்பு கணினி வழியாக அல்லது Cafe வழியாக Online இல் bill payment செய்யும் விசயத்தில் அவதானமாக இருங்கள்

20. அதிக பணம் வைத்துள்ளவராயின் Biometric Verification முறை அதாவது விரல் ரேகை, கண் போன்றவற்றை காட்டினாலேயே பணம் பெறலாம் இந்த முறையும் மிகவும் பாதுகாப்பானது.

21. ஏதும் அவசியமோ சந்தேகமோ ஏற்படின் உங்களது வங்கியுடன் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

22. இப்படியான குற்றங்களில் ஈடுபடுவோர் பற்றிய விவரங்கள் தெரிந்தோர் உடனடியாக 011-2422176 அல்லது 011-2326670 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும்.

எனவே, மேற்சொன்ன விசயங்களை கருத்திற் கொண்டு செயல்படுவது எமது வங்கி அட்டை சார்ந்த திருட்டுக்களில் எமது பணத்தை பாதுகாத்துக் கொள்ள உதவும்.

13.02.2019
இஸ்பஹான் சாப்தீன்
நிகழ்ச்சித் தயாரிப்பாளர்,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்.

#ATM #Skimming #Trainer #IsbahanLk #Violation #CyberCrime #CyberSecurity #SLBC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.