நம் முன் உள்ள பொறுப்புகள்
1. அரசு, பொது மக்களுக்கு வழங்கியுள்ள அறிவித்தல்களை பின்பற்றுதல்.
2. நமது பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளல்.
3. இப்படியான மிலேச்சத்தனமான தாக்குதல்களை கண்டித்து நாகரிகமாக நமது எதிர்ப்பை தெரிவித்தல்.
4.பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தளவு ஆறுதல்களை வழங்குதல்.
5. இரத்த தானம் வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல். (இரத்த வங்கி போதுமான அளவு இரத்தம் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.)
6. செய்திகள் மற்றும் புகைப்படங்களை உறுதி செய்து (அவசியம் ஏற்படின் மாத்திரம்) பகிர்தல்.
7. பதட்டங்களை, நெரிசல்களை ஏற்படுத்தாதிருத்தல்.
8. (உங்களுக்கு தோன்றும்) அனுமானங்கள், ஊகங்களைப் பகிர்வதில் இருந்து தவிர்ந்துகொள்ளல்.
9. நம் நாட்டுக்காகவும், நம் நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்தித்தல்.
10. மனிதாபிமான உதவிகோரல்களின் போது ஒன்றிணைந்து செயற்படல்.
இஸ்பஹான் சாப்தீன் 21042019