December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

‘ரோஹிங்யா’ நாம் என்ன செய்யலாம்?

1 min read

‘ரோஹிங்யா மக்கள்’ கொத்துக் கொத்தாக கொல்லப் படுகிறார்கள். பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். குழந்தைகள் சின்னாபின்னப் படுத்தப்படுகிறார்கள், சொத்துகள் சூரையாடப்படுகின்றன. சொந்த பூமியை விட்டு துரத்தியடிக்கப்படுகிறார்கள். இவ்வளவும் தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கியவர்களுக்கு நன்றிக் கடன் தீர்க்கும் முறைகள்.

இது முஸ்லிம்களுடைய பிரச்சினை கிடையாது. ஒட்டுமொத்த மனிதர்களுக்குமான பிரச்சினை. மனிதாபிமானமுள்ள ஒவ்வொரு மனிதனும் குரல் கொடுக்க வேண்டிய பிரச்சினை. மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஊடகங்களும் சர்வதேசமும் தொடர்ந்தும் மௌனத்தைக் கடைபிடிப்பது மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதையே காட்டுகிறது. பாதையோரம் விழுந்துகிடக்கும் நாய்க்குட்டியை ஆரத்தழுவும் மிருகாபிமானம் கூட மனிதனுக்கு காட்டப்படாதிருப்பதென்பது நாகரீகத்தின் உச்சபச்ச வீழ்ச்சியையே குட்டிக் காட்டுகிறது.நாம் என்ன செய்யலாம்???

1. ரோஹிங்யருக்காக நாம் பிரார்த்திப்போம். இருந்த இடத்தில் இருந்து செய்ய முடியுமான உதவி இது.
2. நாம் மனிதாபிமானம் உள்ளவர்கள் என்றால், மனதளவில் அதிருப்தியை தெரிவிப்போம்.
3. அகிம்சையான வழியில் நம் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
4. ரோஹிங்யர்களின் வரலாற்றை தேடி வாசிப்போம்.
5. ஜனநாயக முறையில் உதவிகளை வழங்குவோம்.
6. சர்வதேசத்துக்கு அழுத்தங்களை வழங்குவோம்.
7. பொதுத்தளத்தில் படங்களை, கருத்துகளை நாகரீகமான முறையில் வெளியிடுவோம்.
8. நிதானமும் அமைதியும் உரையாடலும் சிறந்த தீர்வைப் பெற்றுத்தரும் என்பதை கற்றுக்கொள்வோம்.

இவற்றுள் எங்களுக்கு எவற்றை செயற்படுத்த முடியுமோ அதனை செயற்படுத்துவது மனிதாபிமானமுள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள பொறுப்பாகும்.

The Rohingya
கீழ உள்ள Documentary அல் ஜெஸீராவால் வெளியிடப்பட்ட ஒரு திரைக்கதையாகும். https://youtu.be/OVb9U-ajuoA
#SaveHumanity #SaveHumanity

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.