இஸ்பஹான் சாப்தீனின் கவிதைகள் குறித்து…
1 min read02. இஸ்பஹான் சாப்தீ னின் கவிதைகள் குறித்து…
-சட்டத்தரணி எம்.எஸ்.எம்.நிளாம் – காலி மா நகர சபை உறுப்பினர்-
கவிஞன் என்பவன், தான் அறிந்தவற்றையும் அனுபவித்தவற்றையும் வனப்புறு வசனப் பூக்களாகக் கோர்த்து வியப்புறு கவிதைப்பாக்களாகப் படைப்பவன். அவன் கல்லையும், முள்ளையும், மரத்தையும், கரத்தையும், அலையையும், சிலையையும், விரலையும், வீணையையும் அகக் கண்ணால் பார்ப்பவன். அவன் துயில் மறந்து துயர் சுமந்து வாசகனின் ரசனைத் தாகம் தீர்க்க தன் நிகழ்காலங்களை இழப்பவன். இம் முயற்சியில் அவன் அவனையே இழந்தாலும் பிறர் இதயங்களில் அழியாது வாழ்கிறான். இந்தக் கவிஞர் வரிசையில் இளைஞர் இஸ்பஹான் சாப்தீன் தன் அபார முயற்சியால் ஆரோக்கியக் கவிதைகளைப் பிரசவித்து தன்னையும் நுழைத்துக் கொள்கிறார்.