December 23, 2024

Isbahan.com

Isbahan Blog

“இலங்கையில் சாதியம்” புது நூலும் புரிதல்களும்…

1 min read

நூல் தலைப்பு: Caste in Sri Lanka (இலங்கையில் சாதியம்)
நூலாசிரியர்: ஆஸிப் ஹுசைன்
வெளியீட்டாளர்: நெப்டியூன் பப்ளிகேஷன்ஸ் ( பி ) லிமிடெட்
நூல் மொழி: ஆங்கிலம்
பக்கங்கள் : 420 பக்கங்கள்; இதில் 20 பக்கங்கள் புகைப்படங்களை உள்ளடக்கியது.
விலை : ரூ . 1500
அனைத்து முன்னணி புத்தகக்கடைகளிலும் கிடைக்கும்.

——————————————————————————————————————————–

Caste in Sri Lanka (இலங்கையில் சாதியம்)

நாம் வாழும் இன்றைய அறிவொளிக் காலத்திலும் கூட சாதியம் (Casteism) என்பது மிக முக்கிய ஒரு தலைப்பாகவே காணப்படுகிறது.

சாதியம்; தோற்றம் மற்றும் வியாபகம், இந்தியாவில் சாதிய வியாபகம், சிங்கள சமூகத்தில் உள்ள சாதிப் பிரிவுகள், தமிழ் சாதிக் குழுக்கள் மற்றும் முஸ்லிம்களில் அடையாளங் காணப்பட்ட ‘ஒஸ்தா’ எனும் நாவிதர் பிரிவு என பல விடயங்கள் இத்தலைப்பின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது. சிங்கள சமூகத்தில் உள்ள 25 இற்குக் குறையாத பிரிவுகள், தமிழ் சமூகத்தில் 30 இற்கும் அதிமான பிரிவுகள், முஸ்லிம் சமூகத்தில் ஒரு பிரிவு என பல சாதிப் பிரிவுகளை அடையாளங் காட்டி இந்நூல் வழி விளக்குகிறார்.

சமகாலத்தில், சமூக யதார்த்த நிலைகள் பற்றிய தெளிந்த அறிவுடன் மக்கள் இருக்கிறார்கள். எனவே, கடந்துவந்த காலங்களை விட சமகால சூழ்நிலையில் இந்நூல் வெளிவருவது மிகப் பொருத்தமே. பன்னூல் ஆசிரியர் ஆஸிப் ஹுசைனின் தற்போது வெளிவந்துள்ள Caste in Sri Lanka (இலங்கையில் சாதியம்) எனும் இந்நூல் காலத்திற்குப் பெருமதியான ஒரு நூல். ஆசிரியரால் சமூகவியல் துறைக்கு வனப்பு சேர்க்கும் ஒரு பங்களிப்பாக மாத்திரம் இது இருக்காமல், அறியப்பட்ட இச்சிறு தலைப்பில் வாசகர்களுக்கு அறியாத பல ஆழ அகலங்களை வழங்கும் ஒரு படைப்பாகவும்  திகழும்  என நான் நம்புகிறேன்.

——————————————————————————————————————————————-

நூல் ஆசிரியர் பற்றி:

ஆஸிப் ஹுசைன் திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியலில்  பி.ஏ. பட்டம் பெற்றவர், இலங்கை, களனி பல்கலைக்கழக தொல்பொருளியல் துறையில் பட்டப் பின் டிப்ளமோ மற்றும் உயர் கல்வி அக்வினாஸ் கல்லூரியில் இதழியல் டிப்ளோமா முடித்தவர்.

ஆஸிப் ஹுசைன் இனப்பண்பாட்டியல், சமூகவியல் மற்றும் மொழியியல் துறைகளில் பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

அவரது மிகவும் குறிப்பிடத்தக்க வெளியீடுகள்

  • Sarandib. An Ethnological Study of the Muslims of Sri Lanka (Feb & July 2007 and September 2011)
  • Zeylanica, a Study of the Peoples and Languages of Sri Lanka (2009)
  • Ivilly Pevilly. The Gastronome’s Guide to the Culinary History & Heritage of Sri Lanka (2012)
  • Caste in Sri Lanka (2013)

அத்தோடு Hameed Kareem உடன் இணைந்து

  • Memons of Sri Lanka. Men, Memoirs, Milestones with Hameed Kareem (2006) என்ற நூலையும்

S.H.M. Jameel உடன் இணைந்து

  • The Muslim Heritage of Eastern Sri Lanka with S.H.M.Jameel (2011) என்ற நூலையும் வெளியிட்டுள்ளார்.

———————————————————————————————————————————————

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.