December 22, 2024

Isbahan.com

Isbahan Blog

இஸ்பஹான் சாப்தீன்

1 min read

 

ஸ்பஹான் சாப்தீன்

அறிமுகம்.

இஸ்பஹான் சாப்தீன், இலங்கை தீவின் தென் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காலி நகரின் தெற்கே அமைந்துள்ள “கட்டுகொடை” எனும் அழகிய கடலோரக் கிராமத்தில் 1987 மார்ச் மாதம் 28ஆம் திகதி (இஸ்லாமிய ஹிஜ்ரி கலண்டர் படி அன்று மிஃராஜ் தினம்) பிறந்தார்.

வாப்பா.

இஸ்பஹானின் வாப்பாவின் பெயர் சாப்தீன் (தீன் நானா). இவரின் வாப்பாவின் பெயர் அப்துர் ரஹீம் (காபு பொட்டி). இவர் 9 பேரில் மூத்தவர். (4 சகோதரர்களும் 4 சகோதரிகளும் உளர்) இவர் மாணிக்க வியாபாரி (பொன், வெள்ளி யாவாரி). நல்ல மேடைப் பாடகராக பேசப்பட்டவர்.

உம்மா.

உம்மாவின் பெயர் ளரீபா. இவரின் வாப்பாவின் பெயர் ஸித்தீக். பரியாரி முறை நாட்டு வைத்தியம் செய்து வந்த பரம்பரையைச் சேர்ந்தவர். உம்மாவின் உம்மா பெயர் ஹலீமா உம்மா. உம்மாவின் பரம்பரையினர் கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு மேலாக (இன்று வரை) வீட்டில் குர்ஆன் ஓதற் பள்ளி (பள்ளிகொடம்) நடாத்தி வருபவர்கள்.

சகோதர, சகோதரிகள்.

இஸ்பஹானுக்கு 2 தங்கைகள். மூத்த தங்கை வீட்டில் சிறுமிகளுக்கு குர்ஆன் ஓதற் பள்ளி நடாத்தி வருகிறார். சிரிய தங்கை இன்னும் படிக்கிறார். (வளர்ந்து வரும் ஒரு பெண் படைப்பாளி). இஸ்பஹானுக்கு, அவரது வாப்பாவின் முதல் திருமணத்தில் பிறந்த 3 நானாவும், 3 தாத்தவும் இருக்கின்றனர் என்பது மேலதிக தகவல்.

மத்ரஸா கல்வி.

ஆரம்பப் பருவத்திலேயே அரபு மொழியில் குர்ஆன் ஓதவும், அரபுத் தமிழ் வாசிக்கவும் வீட்டுச்சூழல் இருக்கு பெரிதும் உதவியது. அதன் பிறகு அல்-மத்ரஸதுல் காதிரிய்யதுல் அலவிய்யா, அல்-மத்ரஸதுல் இலாஹிய்யா ஆகிய மத்ரஸாக்களில் குர்ஆனும், அதனோடு தொடர்பான ஆரம்பக் கலைகளையும் கற்றார். கட்டுகொடை அஹதிய்யா பாடசாலையில் 11ஆம் தரம் வரை இஸ்லாம் கற்றார்.

ஆரம்பக் கல்வி வாழ்க்கை.

கட்டுகொடை வை.எம்.எம்.ஏ இல் நடாத்தப்பட்டு வந்த பாலர் பாடசாலையில் சேர்க்கப்பட்டதால் சிங்கள மொழியில் தன் பாலர் கல்வியை தொடங்கினார். இருந்த போதும் தன் பாடசாலைக் கல்வியை தமிழ் மொழியில் கா.குமர கனிக்ஷ்ட வித்தியாலயத்தில் (தற்போது தாஸிம் கல்லூரி) தொடர்ந்தார்.

தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.